அமிதாப் பச்சன் பேத்தி அந்த நடிகரை காதலிக்கிறாரா? தீயாய் பரவும் தகவல்.. ஹங்காமா 2 நடிகர் பதில் இதோ!
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தி ஹங்கமா 2 நடிகருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இருவரும் நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக காட்டுத் தீ போல பாலிவுட் முழுக்க இதுதான் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஹங்காமா 2 படத்தில் நடித்துள்ள நடிகர் மீஸான் ஜாஃப்ரி அளித்துள்ள விளக்கமும் வைரலாகி வருகிறது.

அமிதாப் பச்சன் பேத்தி
இந்திய திரையுலகின் அல்டிமேட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தா நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் நந்தாவின் மகள் தான் நவ்யா நவேலி நந்தா.

நடிகருடன் டேட்டிங்
பாலிவுட்டின் இளம் நடிகர் மீஸான் ஜாஃப்ரி உடன் மிக நெருக்கமாக நவ்யா நவேலி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இருவரும் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. நவ்யா நவேலி சினிமாவில் ஈடுபடவில்லை என்றாலும் அவரது பெயர் மீடியாக்களில் அவ்வப்போது அடிபட்டுக் கொண்டே இருக்கிறது.

காதலர்களா
இந்த வதந்தி வைரலான நிலையில், இதுதொடர்பான விளக்கத்தை நடிகர் மீஸான் ஜாஃப்ரியே மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இப்படி வதந்திகளை கிளப்பி விட்டால் அப்புறம் என்னால் அமிதாப் பச்சனின் பிரம்மாண்ட வீடான ஜல்சாவிற்குள் நுழையவே முடியாது என்றும், எங்களுக்குள் காதல் ஏதும் இல்லை என்றும் விளக்கி உள்ளார்.

பள்ளி நண்பர்கள்
என் சகோதரியும் அமிதாப் பச்சன் பேத்தியும் பள்ளித் தோழிகள், அவர்கள் இருவரும் நியூயார்க்கில் ஒன்றாக படித்தார்கள். நாங்கள் இருவரும் குடும்ப நண்பர்கள் அவ்வளவுதான். கடைசியாக ஜல்சா இல்லத்திற்கு கடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பல பிரபலங்களுடன் நானும் கலந்து கொண்டேன் என்று ஒட்டுமொத்தமாக சரண்டர் ஆகி உள்ளார்.
Recommended Video

ஹங்காமா 2
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஹங்காமா 2 படத்தில் ஷில்பா ஷெட்டி, பிரணித சுபாஷ் உள்ளிட்டோருடன் மீஸான் ஜாஃப்ரியும் இணைந்து நடித்துள்ளார். விரைவில் அந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் புரமோஷனுக்காகத் தான் இப்படி அமிதாப் பச்சன் பேத்தியுடன் இணைத்து கிசுகிசுக்கள் பரவுகின்றன என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











