twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிஜ போராளிகள்.. இந்த சுதந்திர தினத்தை சுகாதார ஊழியர்களுக்கு சமர்பிப்போம்.. அமிதாப் பச்சன் உருக்கம்!

    |

    மும்பை: நாடு முழுவதும் 74வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களை வெளியேற்றி சுதந்திர போராட்ட தியாகிகள் பெற்றுத் தந்த சுதந்திர திருநாட்டில் நாம் இன்றும் சுவாசித்து வருகிறோம்.

    மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் போல தற்போது கொரோனா வைரஸிடம் இருந்து நம்மை காத்து வரும் சுகாதார ஊழியர்களை இந்த நாளில் நினைத்து போற்ற வேண்டும் என அமிதாப் பச்சன் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    லாக்டவுன் விழா.. சொந்தங்கள் முன்னிலையில்.. பெரிய குடும்பத்து ஹீரோயினுக்கு திடீர் நிச்சயதார்த்தம்! லாக்டவுன் விழா.. சொந்தங்கள் முன்னிலையில்.. பெரிய குடும்பத்து ஹீரோயினுக்கு திடீர் நிச்சயதார்த்தம்!

    74வது சுதந்திர தினம்

    74வது சுதந்திர தினம்

    வியாபாரம் எனும் பெயரில் நம் நாட்டிற்குள் கடல் வழியாக நுழைந்து, கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கும் மேல் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை எத்தனையோ வீர புருஷர்கள், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, விரட்டி அடிக்கப் பார்த்தனர். பின்னர், இம்சையை அகிம்சையால் விரட்டலாம் என்ற காந்தியின் வழியை பின்பற்றிய பல லட்சம் சுதந்திர போராட்ட தியாகிகளால் நம் மீது சுமத்தப்பட்ட அடிமைகள் என்ற அவச்சொல் நீங்கியது.

    ஒத்துழையாமை இயக்கம்போல

    ஒத்துழையாமை இயக்கம்போல

    74வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட முடியாத சூழலில் நம்மை கொரோனா எனும் கொடிய வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. அனைவரும் ஒத்துழையாமை இயக்கம் போல, சமூக விலகலை கடை பிடிப்பது ஒன்றே இந்த நோயை விரட்ட ஒரே தீர்வு, அரசும் மருத்துவர்களும் கூறும் அறிவுரை பின்பற்றி விரைவில் கொரோனாவில் இருந்து இந்திய திருநாட்டை மீட்க வேண்டும் என்கிற முயற்சியில் ஒவ்வொரு குடிமகனும் ஈடுபட வேண்டும்.

    நிஜ போராளிகள்

    நிஜ போராளிகள்

    இந்த கடினமான காலக்கட்டத்தில், எத்தனையோ மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றி வருகின்றனர். அவர்களை இந்த நல்ல நாளில் நினைத்து போற்ற வேண்டும், அவர்கள் தான் தற்போதைய சூழலில் நிஜ போராளிகள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ராயல் சல்யூட் என அமிதாப் பச்சன் உருக்கமான போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    இரும்பு மனிதர்

    இரும்பு மனிதர்

    77 வயதிலும் கொரோனா வைரஸிடம் இருந்து கடுமையான போராட்டத்திற்கு பிறகு நடிகர் அமிதாப் பச்சன் போராடி சமீபத்தில் மீண்டுள்ளார். அவரது மன வலிமையை பல பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து ரசிகர்கள் உடன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் அமிதாப் பச்சன்.

    Recommended Video

    V-CONNECT | ACTRESS KHUSHBOO CHAT PART-04 | AMITABH BACHCHAN தான் என்னோட CRUSH | FILMIBEAT TAMIL
    வரிசையாக

    வரிசையாக

    தமிழில் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து நடித்த உயர்ந்த மனிதன் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. பாலிவுட்டில் ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிப்பில் அமிதாப் பச்சன் நடித்துள்ள பிரம்மாஸ்த்ரா படமும், நாகராஜ் மஞ்சுலே மற்றும் ரூமி ஜாஃப்ரே இயக்கத்தில் உருவாகியுள்ள ஜூந்த் படங்களும் ரிலீசுக்காக வெயிட்டிங்.

    English summary
    Bollywood megastar Amitabh Bachchan praised health workers on this auspicious day, and he also salutes the true warriors in his recent insta post.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X