Kamal Haasan - ஹலோ கமல் ஹாசன் அதை முதலில் நிறுத்து.. என்ன அமிதாப் பச்சன் இப்படி சொல்லிட்டாரு?
மும்பை: Kamal Haasan (கமல் ஹாசன்) நடிகர் கமல் ஹாசனிடம் அமிதாப் பச்சன் சொன்ன ஒரு விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 500 கோடி ரூபாய் வரை வசூலித்தது. விக்ரமின் வெற்றியால் உற்சாகமடைந்த கமல் ஹாசன் தொடர்ந்து சினிமாவில் பழையபடி கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

இந்தியன் 2: அதன் விளைவாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக கமிட்டாகியிருக்கிறார். இவற்றில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 மட்டுமின்றி இந்தியன் 3யையும் உருவாக்க ஷங்கரும், கமல் ஹாசனும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கான ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.
தயாரிப்பு பணி: நடிகராக மட்டுமின்றி தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் கம்பெனி மூலம் படங்களையும் தயாரித்துவருகிறார் கமல். அதன்படி தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஆகியவைகள் தற்போது தயாரிப்பில் இருக்கின்றன. இதனையடுத்து விக்னேஷ் சிவன் ப்ரதீப் ரங்கநாதன் இணையும் படத்தையும் அவர் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
வில்லனாக கமல்: இதற்கிடையே நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் வில்லனாகவும் கமிட்டாகியிருக்கிறார் கமல். இந்தப் படத்துக்காக 130 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி முழு மூச்சாக சினிமாவில் மீண்டும் களமிறங்கிய கமலை பார்த்து ஆண்டவர் மீண்டும் வரார் என கமல் ரசிகர்கள் ஃபயர் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
கல்கி: பிரபாஸ் நடிக்கும் கல்கியில் கமல் ஹாசன் தவிர்த்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கவிருக்கிறது. முதலில் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் பெயர் அமெரிக்காவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் கல்கி என அறிவிக்கப்பட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது.
கமலை கலாய்த்த அமிதாப்: இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன், "கல்கியில் நான் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு காரணம் அனலாக் ஃபார்மெட் சினிமாவிலிருந்து வந்தவன் நான். நெகட்டிவ் இல்லாமல் பாசிட்டிவ் இல்லை. எனவே நெகட்டிவ் ரோல் ஒரு படத்துக்கு ரொம்பவே முக்கியமானது. அமிதாப் பச்சன் வாழும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பது பெருமை" என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமிதாப் பச்சன், கமல் ஹாசன் தன்னடக்கமாக இருப்பதை முதலில் நீ நிறுத்து. எங்கள் எல்லோரையும் விட நீதான் மிகச்சிறந்த நடிகர். அது எங்களுக்கே தெரியும் என சொன்னார். அமிதாப் இவ்வாறு கமலிடம் சொல்லும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











