நடிகைகளை தொடர்ந்து பகீர் தகவல் வெளியிட்ட அமிதாப் பச்சன்: தவறான ரத்தத்தால் 75% கல்லீரல் பாதிப்பு!

மும்பை: தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 75 சதவீத கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகைகள் பலரும் புற்றுநோய், மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகை மனீஷா கொய்ராலா, சோனாலி பிந்த்ரே ஆகியோர் அமெரிக்காவில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர்.

நடிகை ஆண்ட்ரியா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் ஆயுர்வேத சிகிச்சை பெற்றதாக கூறினார். இந்நிலையில் நடிகை பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், தானும் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறினார்.

தவறான ரத்தம்

தவறான ரத்தம்

நடிகைகள் தொடர்ந்து மன அழுத்தத்திற்கு ஆளாவதாக கூறுவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனக்கு தவறான ரத்தம் செலுத்தப்பட்டதாக கூறி குண்டை தூக்கி போட்டுள்ளார்.

காசநோய் பாதிப்பு

காசநோய் பாதிப்பு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமிதாப், தனது உடல் நிலை குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறினார். தான் காசநோய் பாதிப்பில் இருந்து தப்பியிருப்பதாகவும் கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

கல்லீரல் பாதிப்பு

கல்லீரல் பாதிப்பு

மஞ்சள்காமாலையில் இருந்து மீண்டிருப்பதாகவும் கூறினார் அவர்.
அதுமட்டுமின்றி தனது உடம்பில் தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 75 சதவீத கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 25 சதவீதம் மட்டுமே கல்லீரல் வேலை செய்வதாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.

8 வருடங்கள்

8 வருடங்கள்

தான் பாதிக்கப்பட்டதால்தான் மற்றவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும் கூறினார் அமிதாப் பச்சன். தான் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தது 8 வருடங்களுக்கு பிறகே தனக்கு தெரியவந்தது என்றும் அவர் கூறினார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

மக்கள் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். அமிதாப் பச்சனுக்கு தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் அவரது கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய தகவலை கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X