மகன் அபிஷேக் கண் முன்பு ஜெயாவுக்கு டூ லிப் லிப் கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்
மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயாவுக்கு விருது விழாவில் வைத்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது பலரின் கண்களையும் விரிய வைத்துள்ளன.
லைஃப் ஓகே ஸ்கிரீன் விருது விழா மும்பையில் நடந்தது. இந்த விழாவில் யார், யார் விருது வாங்கினார்கள் என்பதை விட அங்கு நடந்த 2நிகழ்ச்சிகள் பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நடந்த 2 அதிசயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

ரேகா
அமிதாபுக்கும், நடிகை ரேகாவுக்கும் ஒரு காலத்தில் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இதனால் ரேகாவுக்கும், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கும் ஆகவே ஆகாது. இத்தனை ஆண்டுகளாக முகம் கொடுத்து பேசாத அவர்கள் முதல்முறையாக இந்த விருது விழாவில் பேசியுள்ளனர்.

அபிஷேக் பச்சன்
விருது விழாவில் முதல் வரிசையில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சனுக்கு இடையே அவர்களின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் அமர்ந்திருந்தார்.

விருது
விழாவில் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது. இது குறித்த அறிவிப்பு வெளியானவுடன் அமிதாபும், ஜெயாவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

முத்தம்
விருது கிடைத்த மகிழ்ச்சியில் இடையே மகன் இருப்பதையும் தாண்டி அமிதாப் மற்றும் ஜெயா பச்சன் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டனர். இந்த அரிய காட்சியை புகைப்படக்காரர்கள் கிளிக்கி தள்ளிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











