twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான்கு 500கள் பெரியதா? ஒரு 2000 பெரியதா? ஐசிசியை கிண்டலடித்த அமிதாப் பச்சன்!

    |

    Recommended Video

    WORLD CUP 2019 : IND VS NZ | குட்டையைக் குழப்பிய ரவி சாஸ்திரி.. விரக்தியில் ரசிகர்கள்!- வீடியோ

    மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஐசிசியின் பவுண்டரி விதிமுறையை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கிண்டலடித்துள்ளார்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதின.

    இதில் போட்டி சமன் ஆனததால் சூப்பர் ஓவர் வரை சென்றது. ஓவரிலும் போட்டி சமனானது.

    இந்தியன் 2 படத்தில் ப்ரியா பவானிசங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ்?: அய்யோ காஜல் பாவம் இந்தியன் 2 படத்தில் ப்ரியா பவானிசங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ்?: அய்யோ காஜல் பாவம்

    இங்கிலாந்து வெற்றி

    இங்கிலாந்து வெற்றி

    இதைத்தொடர்ந்து ஐசிசி விதிப்படி அதிக பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அமிதாப் கிண்டல்

    அமிதாப் கிண்டல்

    ஐசிசியின் இந்த விதிமுறை கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
    இந்நிலையில் ஐசிசியின் விதியை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கிண்டலடித்துள்ளார்.

    500 ரூபாய் வைத்துள்ளவரே

    இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், உன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் ஒரே நோட்டாக இருக்கிறது. என்னிடம் ரூ.2 ஆயிரம் நான்கு 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கிறது. நம்மில் யார் பணக்காரர் என்று கேட்க அதற்கு நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்துள்ளவரே பணக்காரர் என்று ஐ.சி.சி. சொல்வது போல் டிவிட்டியுள்ளார் அமிதாப் பச்சன்.

    எத்தனை பூஜ்ஜியங்கள்

    எத்தனை பூஜ்ஜியங்கள்

    மேலும் இதனை விளக்கும் விதமாக கணக்கு ஒன்றை ரசிக்ர ஒருவர் பதிவிட்டிருக்கிறார். அதாவது, 500 ரூபாய் நோட்டில் 2 பூஜ்ஜியங்கள் உள்ளன. அப்படியானால் நான்கு, 500 ரூபாய் நோட்டுகளில் 8 பூஜ்ஜியங்கள் உள்ளன. நான்கு 5கள் உள்ளன.

    8 பூஜ்ஜியங்களே பெரியது

    8 பூஜ்ஜியங்களே பெரியது

    ஆனால் ஒரு 2000 ரூபாய் நோடில் ஒரே ஒரு இரண்டும் 3 பூஜ்ஜியங்களும் மட்டுமே உள்ளன. ஆகையால் 3 பூஜ்ஜியங்களை காட்டிலும் 8 பூஜ்ஜியங்களே பெரியது, அதேபோல் ஐந்தை விட இரண்டு சிறியது. அதனால் ஐசிசி சொல்வது சரி என உள்ளது அந்த டிவிட்.

    English summary
    Amitabh Bachchan teasing ICC boundary rule on world cup.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X