ரசிகர்களின் அன்பு என்னை உயிர்பிழைக்க வைத்தது - 2வது பிறந்தநாளில் நன்றி சொன்ன பிக் பி
ரசிகர்களின் அன்பும், காதலும்தான் விபத்தில் சிக்கியிருந்த என்னை உயிர்பிழைக்க வைத்தது இந்த நாளை ரசிகர்கள் என்னுடைய இரண்டாவது பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர் என்று அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
மும்பை: இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய செல்வாக்கு மிகுந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் அமிதாப் பச்சன் அவரது இரண்டாவது பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் அன்பும் காதலும்தான் என்னை பிழைக்க வைத்தது அனைவருக்கும் நன்றின்னு சொல்லியிருக்கார் அமிதாப்பச்சன்.
பாலிவுட் பட உலகின் ஜாம்பவானாக திகழும் அமிதாப்பச்சனை "பிக் பி" என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். அவரை பிடித்த பலருள் சிலருக்கு மட்டும் தான் அவரது 2வது பிறந்தநாள் பற்றி தெரிந்திருக்கும் .

1983ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி பெங்களூரில் "கூலி "திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது ஒரு நாற்காலியில் மோதி தலையில் அடிபட்டு பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு சுயநினைவை இழந்து மரணத்தை தொடும் தருவாயில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
அவரின் உறவினர்கள்,நண்பர்கள்,ரசிகர்கள் அனைவரின் பிரார்த்தனையால் அவர் உயிர் பிழைத்து மறுபடியும் வந்தார். இந்நாளை அவரது ரசிகர்கள் 2 வது பிறந்த நாளாக கொண்டாடினார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று கூலி படத்தைப் போலவே சிவப்பு நிற சட்டை அணிந்து இனிப்புகளை கொடுத்தனர்.
இந்நாளில் அனைவர்க்கும் நன்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன் என்றும், ரசிகர்களின் அன்பும் பிராத்தனையும்தான் தன்னை பிழைக்க வைத்ததுன்னு சொல்லி தனது மகள் ஸ்வேதா பச்சனோட இருக்கிற சிறுவயது புகைப்படத்தை போஸ்ட் செய்து தனது சந்தோஷத்தையும் நன்றியையும் பகிர்ந்து இருக்கிறார் அமிதாப்பச்சன்.


Click it and Unblock the Notifications











