ஆப்பரேஷன் முடிந்தது ...ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அமிதாப் பச்சன்

மும்பை : பாலிவுட்டின் மெகா ஸ்டாராக இருந்து வருபவர் அமிதாப் பச்சன். இவர் 2 நாட்களுக்கு முன் தனது பிளாக்கில், உடல் நல பிரச்சனையால், அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது இதனால் தன்னால் தொடர்ந்து எழுத முடியாது என ரசிகர்களிடம் பகிர்ந்திருந்தார்.

இதைத் தவிர வேறு ஏந்த தகவலையும் அவர் பகிரவில்லை. இதனால் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய துவங்கினர். அவரது உடல்நிலை பற்றி பலரும் கவலை தெரிவித்திருந்தனர்.

அமிதாப்பிற்கு என்ன பிரச்சனை

அமிதாப்பிற்கு என்ன பிரச்சனை

ஆப்ரேஷன் என அமிதாப் கூறியது பற்றி அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், பெரிதாக ஒன்றும் இல்லை. கண்ணில் உள்ள கேட்ராக்ட் லேசர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட உள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த 24 மணி நேரத்தில் அவர் வீடு திரும்புவார் என்றார்.

பலமுறை ஆப்பரேஷன்

பலமுறை ஆப்பரேஷன்

இத்தனை ஆண்டு திரையுலக பணியில் அமிதாப் பச்சனுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக பலமுறை அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்தமுறை பார்வை குறைபாட்டை நீக்குவதற்காக கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

இன்று காலை மீண்டும் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட அமிதாப் பச்சன், எனக்காக அக்கறை கொண்டவர்கள், பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. இந்த வயதில் கண் அறுவை சிகிச்சை என்பது சற்று கடினமானது தான். பார்வையும் மெல்ல மெல்ல தான் சரியாகும். அதனால் எனது பதிவில் ஏதாவது தவறு ஏற்பட்டால் மன்னிக்கவும் என குறிப்பிட்டுள்ளார். தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அறுவை சிகிச்சை

மீண்டும் அறுவை சிகிச்சை

தற்போது ஒரு கண்ணில் மட்டுமே அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாகவும், விகாஸ் பஹல் இயக்கும் குட்பை படத்தில் நடிப்பதற்கு முன் மற்றொரு கண்ணிலும் அறுவை சிகிச்சை நடைபெறும் எனவும் அமிதாப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Even Ulaga Nayagan Kamal Hassan Faced Nepotism
 பன்முக திறமைசாலி

பன்முக திறமைசாலி

78 வயதாகும் அமிதாப் பச்சன் 1970 களில் இருந்து புகழ்பெற்ற நடிகராக இருந்து வருகிறார். இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள அமிதாப், பல படங்களை தயாரித்துள்ளார். குரோர்பதி போன்ற டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார். ஆவண படங்கள், இசை ஆல்பங்களில் நடித்து வெளியிட்டுள்ளார். பின்னர் குரலும் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X