விநாயகனே போற்றி.. அமிதாப் பச்சன் முதல் ஹன்சிகா வரை.. விநாயகர் சதுர்த்திக்கு பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: பிள்ளையார் சுழி போட்டுத் தான் பலரும் பல காரியங்களை தொடங்குகின்றனர்.

Recommended Video

Aishwarya Rai & Aradhya Tested Negative and Discharged

திரைத்துறையிலும் ஒரு படத்தை துவங்குவதற்கு முன்னதாக நிச்சயம் பலரும் பூஜை போட்டுத் தான் ஆரம்பிப்பார்கள்.

பல நடிகர்களின் ஃபேவரைட் கடவுளாகவும் கணேசர் திகழ்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமிதாப் பச்சன் முதல் ஹன்சிகா வரை தங்கள் ரசிகர்களுக்கு எப்படி வாழ்த்து சொல்லி இருக்காங்கன்னு இங்கே காண்போம்..

அமிதாப் பச்சன் வாழ்த்து

அமிதாப் பச்சன் வாழ்த்து

77வயதாகும் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன், சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து போராடி மீண்டுள்ளார். இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு விநாயகரை வழிபட்டு, "கணபதி பப்பா மோரியா" என மும்பை ஸ்டைலில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வித்தியாசமாக

வித்தியாசமாக

விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு வழக்கம் போல களைகட்டாமல், சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. ஆனாலும், விநாயகர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், ஒருபோதும் குறையாது. இந்த நல்ல நாளுக்கு பிறகாவது, மக்கள் கொரோனா துயரில் இருந்து மீண்டு வர வேண்டும் என நடிகை பிரியங்கா சோப்ரா பிரார்த்தனை செய்துள்ளார்.

பாதுகாப்பாக கொண்டாடுங்கள்

பாதுகாப்பாக கொண்டாடுங்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் சந்தைகளில் பூஜை பொருட்கள், பழங்களை வாங்க குவிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நாம் இன்னமும் மீளவில்லை என்பதை மக்கள் மனதில் வைக்க வேண்டும் என்பதற்காக Stay Safe விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என மலையாள திரையுலகின் டாப் ஹீரோ பிருத்விராஜ் வாழ்த்து கூறியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்

விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்

பாகுபலி குழு வெளியிட்ட விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்ட புகைப்படத்தை ஷேர் செய்து, அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் என நகைச்சுவை நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

என் வாழ்க்கைக்கான பிள்ளையார் சுழி

என் வாழ்க்கைக்கான பிள்ளையார் சுழி

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அமர்க்களம் படத்தில் வரும் "காலம் கலி காலம் ஆகிப்போச்சுடா" பாடல் வீடியோவை பதிவிட்டு, தனது வாழ்க்கை தொடங்கியதே, இந்த மகா கணபதி பாடல் மூலமாகத்தான் என பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குநர் சரண் மற்றும் தல அஜித்துக்கு தனது நன்றியையும் இந்த நல்ல நாளில் தெரிவித்துள்ளார்.

V- நாயகர்

V- நாயகர்

நடிகர் பார்த்திபன் தனக்கே உரித்தான ஸ்டைலில் " V-நாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! V for victory!!!" என தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பார்த்திபனுக்கு அவரது ரசிகர்களும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஹன்சிகா வாழ்த்து

ஹன்சிகா வாழ்த்து

நடிகை ஹன்சிகா விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அழகான விநாயகர் வாழ்த்துச் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார். பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்களும் தொடர்ந்து தங்களது ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த கொடிய கொரோனாவில் இருந்து உலகம் விடுபட பலரும் இன்று விநாயகரை வேண்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X