For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இன்னொரு பேரிழப்பு.. அமிதாப் பச்சன் முதல் குஷ்பு வரை.. சரோஜ் கான் மரணத்திற்கு பிரபலங்கள் இரங்கல்

  |

  மும்பை: மாரடைப்பு காரணமாக உயிரிழந்த பழம்பெரும் நடன இயக்குநர் சரோஜ் கானுக்கு இந்திய திரையுலகமே ஒன்று திரண்டு இரங்கல் தெரிவித்து வருகிறது.

  படுக்கைக்கு அழைப்பது சரி என்ற 'ரீல்' ஷகீலா!

  பல முன்னணி பிரபலங்கள் தொடர்ந்து மரணித்து வருவது திரையுலகிற்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  சுமார் 2000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துக் கொடுத்த நடனத்தின் தாய் என போற்றப்பட்ட சரோஜ் கானின் ஈடு செய்ய முடியாத இந்த இழப்புக்கு அமிதாப் பச்சன் முதல் நடிகை குஷ்பு வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் திடீர் மரணம்.. மாரடைப்பால் உயிர்பிரிந்தது.. பாலிவுட் அதிர்ச்சி! பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் திடீர் மரணம்.. மாரடைப்பால் உயிர்பிரிந்தது.. பாலிவுட் அதிர்ச்சி!

  குணமடைந்து வந்தார்

  குணமடைந்து வந்தார்

  கடந்த 17ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால், சரோஜ் கானுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அவரது உடல்நிலை முன்னேறி வருவதாக அவரது மகன் ராஜு கான் மீடியாவுக்கு தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  அமிதாப் பச்சன் இரங்கல்

  அமிதாப் பச்சன் இரங்கல்

  71வயதாகும் சரோஜ் கான் குணமடைந்து வருகிறார் என்ற செய்தி அறிந்து நிம்மதி அடைந்து வந்த பாலிவுட் திரையுலகம், அதிகாலை 1.52 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு, மீண்டும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சனின் பல படங்களில் நடனம் அமைத்துள்ள சரோஜ் கானின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.

  மனோஜ் பாஜ்பாய் இரங்கல்

  மனோஜ் பாஜ்பாய் இரங்கல்

  பாலிவுட்டின் சிறந்த நடிகராக விளங்கி வரும் நடிகர் மனோஜ் பாஜ்பாய், தனது டிவிட்டர் பக்கத்தில், சரோஜ் ஜியின் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார். அண்மையில் சோன்சிரியா படத்தில் உடன் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தால் வாடி தவிக்கும் இவர், தற்போது மற்றொரு பிரபலம் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  நடனத்தை சுலபமாக்கியவர்

  நடனத்தை சுலபமாக்கியவர்

  நடனத்தின் ராணி என்றும், நடனத்தின் அன்னை என்றும் பாலிவுட் பிரபலங்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜ் கான், உயிரிழப்பு செய்தியை கேட்டவுடன் தான் மிகவும் மன வேதனை அடைந்தேன் என அக்‌ஷய் குமார் பதிவிட்டுள்ளார். மேலும், நடனத்தை சுலபமாக்கியவர், நடனமே என்ன என்று தெரியாதவர்களையும் ஈஸியாக ஆட வைக்கக் கூடிய திறமை கொண்டவரை பாலிவுட் தற்போது இழந்து தவிக்கிறது எனக் கூறியுள்ளார்.

  பெருமை கொள்கிறேன்

  பெருமை கொள்கிறேன்

  கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.. இப்படியொரு லெஜண்ட் கொரியோகிராப் செய்து நான் ஆடவும் பாக்கியம் கொடுத்ததற்கு என நடிகை ஜெனிலியா தனது இரங்கலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை உருக்கமான பதிவு போட்டு கூறியுள்ளார்.

  தனியாக டிரெண்டிங்

  தனியாக டிரெண்டிங்

  பாலிவுட்டின் பழம்பெரும் நடன இயக்குநர் சரோஜ் கான் மறைவுக்கு #RestInPeace என்ற ஹாஷ்டேக்கில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாதுரி தீக்‌ஷித்தின் பல படங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்த சரோஜ் கானை நினைக்கும் வகையில், #MadhuriDixit என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

  குஷ்பு இரங்கல்

  குஷ்பு இரங்கல்

  ரஜினிகாந்தின் தாய் வீடு உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடன இயக்குநராக சரோஜ் கான் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில், மிஸ்டர் இந்தியாவின் ‘தக் தக்' பெண்ணாகவே நீங்கள் எப்போதும் பார்க்கப்படுவீர்கள். வாழ்க்கை எப்போதுமே ராக் அண்ட் ரோலாக இருக்க வேண்டும் என நீங்கள் கற்றுக் கொடுத்த பாடத்தை மறக்க மாட்டோம் என பதிவிட்டுள்ளார்.

  English summary
  Bollywood today woke up to the sad news of ace choreographer Saroj Khan passing away due to cardiac arrest in Mumbai.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X