பறக்கும் சீக்கியர் மறைந்துவிட்டாரே.. மில்கா சிங்கையும் கொண்டு போன கொரோனா.. பிரபலங்கள் இரங்கல்

சென்னை: இந்தியாவின் இணையற்ற ஓட்டப் பந்தய வீரர் மில்கா சிங் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

'பறக்கும் சீக்கியர்' என்கிற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டு வந்த மில்கா சிங் உயிரிழந்த நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அமிதாப் பச்சன் முதல் நடிகை நிவேதா பெத்துராஜ் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பறக்கும் சீக்கியர்

பறக்கும் சீக்கியர்

இந்தியாவின் 'பறக்கும் சீக்கியர்' என பெயர் பெற்ற ஓட்டப் பந்தய வீரர் மில்கா சிங் கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் அவரது மனைவி உயிரிழந்த நிலையில், தற்போது மில்கா சிங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் பெருமை

இந்தியாவின் பெருமை

இந்தியாவின் பெருமை மில்கா சிங் மறைந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிக் பி அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மோகன்லால் இரங்கல்

மோகன்லால் இரங்கல்

சிறந்த தடகள வீரர், சிறந்த மனிதர்.. மில்கா சிங்ஜி நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். நீங்க பல இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என நடிகர் மோகன்லால் அந்த மாவீரருக்கு வணக்கம் தெரிவித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா இரங்கல்

பிரியங்கா சோப்ரா இரங்கல்

நம்முடைய முதல் சந்திப்பை இப்போதும் நினைத்து பார்க்கிறேன். உங்களுடைய கனிவான வரவேற்பு என் நெஞ்சில் நீங்காத நினைவுகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. நம் நாட்டிற்காக நீங்கள் செய்த சாதனைகள் பல. நிம்மதியாக ஓய்வெடுங்கள் மில்கா சிங் ஜி என நடிகை பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ளார்.

நிவேதா பெத்துராஜ் இரங்கல்

நிவேதா பெத்துராஜ் இரங்கல்

'சார்' என கேப்ஷன் போட்டு மில்கா சிங்கின் புகைப்படத்தை பதிவிட்டு நடிகை நிவேதா பெத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் லெஜண்டரி விளையாட்டு வீரர் மில்கா சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X