For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஈகைத் திருநாளாம் ரம்ஜான்.. அமிதாப் பச்சன் முதல் பிரணிதா வரை.. வாழ்த்துக் கூறும் பிரபலங்கள்!

  |

  சென்னை: தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பல இடங்களில் ரம்ஜான் பண்டிகை இன்றே களைகட்டி வருகிறது.

  அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ரம்ஜான் பண்டிகை திருநாள் வாழ்த்துக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

  பிறருக்கு உதவி செய்யவே ஒரு நாளை ஈகைத் திருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

  கிளாமர் செல்ஃபி ஸ்டில்ஸ்.. அதிரடியாக வெளியிட்ட ஹீரோயின்.. மாடர்ன் ஸ்மிதா என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!கிளாமர் செல்ஃபி ஸ்டில்ஸ்.. அதிரடியாக வெளியிட்ட ஹீரோயின்.. மாடர்ன் ஸ்மிதா என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

  அமிதாப் பச்சன் வாழ்த்து

  அமிதாப் பச்சன் வாழ்த்து

  அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.. இந்த நாளில் அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்.. நல்ல நட்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் உள்ளங்களில் அன்பு பெருகட்டும் என பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் குலாபோ சிட்டாபோ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  பிருத்விராஜ் வாழ்த்து

  பிருத்விராஜ் வாழ்த்து

  ஆடுஜீவிதம் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஜோர்டான் சென்ற மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் அவரது படக்குழுவினர், கடந்த இரண்டு மாதங்களாக லாக்டவுன் காரணத்தால், அந்த நாட்டிலேயே சிக்கித் தவித்து வந்தனர். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியினால், நேற்று நாடு திரும்பிய நடிகர் பிருத்விராஜ், ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  மல்லிகா ஷெராவத் வாழ்த்து

  மல்லிகா ஷெராவத் வாழ்த்து

  மணிரத்னத்தின் குரு, உலக நாயகன் கமல்ஹாசனின் தசாவதாரம், சிம்புவின் ஒஸ்தி உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், பல பாலிவுட் படங்களிலும் ஜாக்கி சானின் தி மித் படத்திலும் நடித்த பிரபல கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத், மகிழ்ச்சி மற்றும் அமைதியை அளிக்கும் ஈகைத் திருநாளை போற்றுவோம், அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

  மானசா ராதாகிருஷ்ணன் வாழ்த்து

  மானசா ராதாகிருஷ்ணன் வாழ்த்து

  வக்கீல் சாப் படத்திற்கு பிறகு பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி உள்ள மலையாள நடிகை மானசா ராதாகிருஷ்ணன் தனது ரசிகர்களுக்கு ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

  சாக்‌ஷி அகர்வால் வாழ்த்து

  சாக்‌ஷி அகர்வால் வாழ்த்து

  ராஜா ராணி, காலா, விஸ்வாசம், ஜெயிக்கிற குதிரை, சிண்ட்ரெல்லா, திருட்டு விசிடி என பல படங்களில் நடித்துள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு வரும் அவர், இஸ்லாமிய பெண் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரம்ஜான் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

  பிரணிதா வாழ்த்து

  பிரணிதா வாழ்த்து

  இந்த லாக்டவுன் நேரத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பசியை ஆற்றியுள்ள நடிகை பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் தனது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், டிரான்ஸ்பெரன்ட் ஷீட்கள் வழங்கி கொரோனா பாதிக்காத வகையில் உதவி செய்திருந்தது பாராட்டுக்களை அள்ளியது.

  English summary
  Ramadan celebration started all over the world. Celebrities like Amitabh Bachchan, Prithviraj, Mallika Sherawat, Sakshi Agarwal, Pranitha and much more send their Ramazan wishes.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X