உயர பறக்குது தாயின் மணிக்கொடி.. 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!

சென்னை: அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு சுதந்திர காற்றை இந்தியா சுவாசித்து இன்றுடன் 75 ஆண்டுகள் ஆகி விட்டன.

டெல்லியில் இந்திய பிரதமர் மோடி முதல் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் வரை தேசிய தலைவர்கள் கொடியேற்ற உயர பறக்குது நம் தாயின் மணிக்கொடி.

தேசப்பற்றுக் கொண்ட சினிமா பிரபலங்கள் பலர் இந்த நல்ல நாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைத்து ட்வீட் போட்டு சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

பிக் பி

பிக் பி

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது 3997 ட்வீட்டாக இந்திய சுதந்திர தின வாழ்த்து ட்வீட்டை இன்று பதிவிட்டுள்ளார். இளம் வயது முதல் இப்போது இருக்கும் தோற்றம் வரையிலான புகைப்படத்துடன் கூடிய தேசியக் கொடி போஸ்டர்களை ஷேர் செய்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்தை கூறியுள்ளார்.

மோகன்லால் சல்யூட்

மோகன்லால் சல்யூட்

ராணுவ வீரராக பல படங்களில் நடித்துள்ள மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நடித்த படத்தின் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து நமது தேசியக் கொடிக்கு ராயல் சல்யூட் அடித்துள்ளார்.

பிரியா பவானி சங்கர் பெருமிதம்

பிரியா பவானி சங்கர் பெருமிதம்

சுதந்திர இந்தியாவின் குடிமகன் என்பதே பெருமிதமான விஷயம் தான்.. இதனை சந்தோஷமாக கொண்டாடுவோம்.. அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என நடிகை பிரியா பவானி சங்கர் ட்வீட் போட்டு வாழ்த்தி உள்ளார்.

ஜோக்கர் யோகி பாபு

ஜோக்கர் யோகி பாபு

ஜோக்கர் கெட்டப்பில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு சுதந்திர தின வாழ்த்தை கூறியிருக்கிறார். நடிகர் யோகி பாபுவின் ரசிகர்கள் அவரது புகைப்படத்தை லைக் செய்தும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

இயக்குநர் ரத்னகுமார்

இயக்குநர் ரத்னகுமார்

மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களின் இயக்குநரும் மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தாவுமான இயக்குநர் ரத்னகுமார் வயல்வெளியில் குழந்தைகள் தேசிய கொடியுடன் ஓடும் அழகான புகைப்படத்தை ஷேர் செய்து சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

வேம்புலி வாழ்த்து

வேம்புலி வாழ்த்து

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து கலக்கிய நடிகர் ஜான் கோக்கன் தனது பைசப்சில் தேசியக் கொடியை வரைந்து இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து நாம் அனைவரும் ஒன்று தான். கொரோனா தடுப்பூசியை மறக்காமல் செலுத்திக் கொண்டு இந்தியாவை கொரோனாவில் இருந்து காப்போம் எனக் கூறியுள்ளார்.

உண்மையான சுதந்திரம்

உண்மையான சுதந்திரம்

பிறர் கொடுத்து வருவது சுதந்திரம் அல்ல.. நமது உள்முக தன்மையில் இருந்து உருவாவது தான் வாழ்க்கையின் உண்மையான சுதந்திரம்! இனிய சுதந்திர நல்வாழ்த்துக்கள்! என நடிகையும் பிரபல விஜேவுமான ரம்யா தனது புகைப்படத்தை ஷேர் செய்து சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

சிவகார்த்திகேயன் வாழ்த்து

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டு தேசியக் கொடி எமோஜியை போட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சுதந்திர தின வாழ்த்தை கூறியுள்ளார். அவரது ரசிகர்களும் அவருக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐ லவ் மை இந்தியா

ஐ லவ் மை இந்தியா

கையில் தேசியக் கொடியுடன் வெள்ளை நிற சுடிதார் அணிந்து கொண்டு மராத்தி நடிகை ராணி சாட்டர்ஜி "ஐ லவ் மை இந்தியா" என இன்ஸ்டாகிராமில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்களும் நடிகர்கள் மற்றும் நடிகைகளும் சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X