அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள்: மழலைக் குரலில் ஹேப்பி பர்த்டே பாடிய பேத்தி ஆராத்யா
மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பேத்தி ஆராத்யா ஹேப்பி பர்த்டே பாடல் பாடி வாழ்த்தியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 71வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் எளிமையாகக் கொண்டாடினர்.
மும்பையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

ஆராத்யா வாழ்த்து
மருமகள் ஐஸ்வர்யா ராய் என் பேத்தி ஆராத்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடலை கற்றுக் கொடுத்துள்ளார். ஆராத்யாவும் அந்த பாடலை பாடினாள். ஆனால் பாட்டில் அவள் பெயரையே சொல்லிக் கொண்டாள்.

இந்த ஆண்டு சிம்பிள்
கடந்த ஆண்டு 70வது பிறந்தநாள் என்பதால் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு எளிமையாகவும், அமைதியாகவும் பிறந்தநாளை கொண்டாடினேன். ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக கொண்டாட முடியாது அல்லவா என்றார் அமிதாப்.

அன்பு தான் வேண்டும்
பிறந்தநாள் அன்று அனைவரின் அன்பும், அரவணைப்பும் தான் வேண்டும் என்று அமிதாப் கூறினார்.

தெம்பு இருக்கும் வரை
என் உடலில் தெம்பு இருக்கும் வரை நடிப்பேன். சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் 3,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க எங்களின் ஹரிவன்ஷ் ராய் பச்சன் அறக்கட்டளை அர்ஜா பவுன்டேஷனுடன் கை கோர்த்துள்ளது என்று அமிதாப் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











