சிவாஜி கணேசன் மாஸ்டர், நான் சீடன்: தமிழில் ட்வீட்டி அசத்திய அமிதாப் பச்சன்
Recommended Video

சென்னை: சிவாஜி கணேசனை பாராட்டி தமிழில் ட்வீட் செய்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் உயர்ந்த மனிதன். இந்த படம் மூலம் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
அவர் வேட்டி, சட்டை அணிந்து தமிழர் போன்று இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அமிதாப் பச்சன்
மாஸ்டர் சிவாஜி கணேசனின் நிழலில் இரண்டு சீடர்கள், ஒன்று சூர்யா மற்றொன்று நான். சிவாஜி தமிழ் சினிமாவின் லெஜன்ட்...அவரின் புகைப்படம் சுவரை அலங்கரிக்கிறது.. என் மதிப்பும், மரியாதையும்...அவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். அவர் மாஸ்டர் .. நாம் அவருடைய சீடர்கள் என்று அமிதாப் பச்சன் ட்வீட் செய்துள்ளார்.

ரசிகர்கள்
இந்தி பேசுபவராக இருந்தாலும் அமிதாப் பச்சன் தமிழில் ட்வீட் செய்துள்ளது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. சில குசும்புக்காரர்களோ என்ன அமிதாப்ஜி, ஹர்பஜன் சிங்கிடம் தமிழ் கற்றுக் கொண்டீர்களா என்று கேட்டுள்ளனர்.

மகிழ்ச்சி
அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடிப்பதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் எஸ்.ஜே. சூர்யா. தனக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பை நினைத்து பெருமிதம் கொண்டுள்ளார். ரசித்து ரசித்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

உயர்ந்த மனிதன்
உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











