கருணாநிதிக்காக தமிழில் ட்வீட்டி சுவாரஸ்யமான விஷயம் சொன்ன அமிதாப் பச்சன்
Recommended Video

கருணாநிதிக்காக தமிழில் இரங்கல் தெரிவித்த அமிதாப் பச்சன்- வீடியோ
மும்பை: கருணாநிதிக்காக தமிழில் ட்வீட்டி இரங்கல் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பலர் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தமிழில் ட்வீட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மரியாதைக்குரிய ஸ்ரீ கருணாநிதி அவர்களுக்கு பிரார்த்தனை மற்றும் இரங்கல்..சாத் இந்துஸ்தானி படத்திற்காக நான் முதன்முதலாக தேசிய விருதை அவர் கையால் தான் வாங்கினேன். தேசிய விருது விழா சென்னையில் நடந்தபோது அவர் தான் முதல்வராக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











