அடுத்த பயோபிக்... சினிமாவாகுது பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கைக் கதை... யார் நடிக்கிறாங்கன்னு பாருங்க!
சென்னை: பிரபல சமூக சேவகர், பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது.
இப்போது பயோபிக் காலம். பிரபலங்களின் வாழ்க்கை கதைகளை படமாக்குவது அதிகரித்து வருகிறது.
அந்தப் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால், தயாரிப்பாளர்கள் அதை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடிகை சாவித்திரி
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் முதலமைச்சர்கள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, இந்தி நடிகர் சஞ்சய்தத், நடிகை சாவித்திரி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், தோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், உட்பட பலரது வாழ்க்கை கதைகள் சினிமாக வெளிவந்துள்ளன.

ஜெயலலிதா
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை தலைவி என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் இந்தி நடிகை கங்கனா, ஜெயலலிதாவாக நடிக்கிறார். அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராகவும் ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலாவும் நடிக்கின்றனர். இன்னும் சில அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் வாழ்க்கை கதை படமாகி வருகிறது.
இந்த வரிசையில் சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கையும் படமாகிறது. இவர் பாலம் அமைப்பு மூலம் சமூக சேவை பணிகள் செய்துவருகிறார். அமெரிக்காவில் வழங்கப்பட்ட ரூ.30 கோடி பரிசு தொகையை அவர்களுக்குத் திருப்பி கொடுத்து ஆச்சரியப் படுத்தினார்.Recommended Video

அமிதாப்பச்சன்
ஆங்கிலத்தில் வெளியான பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை கதை புத்தகத்தை நடிகர் அமிதாப்பச்சன் படித்துள்ளார். அதில் நெகிழ்ந்து போன அவர், அவரது வாழ்க்கை கதையில் நான் நடிக்கிறேன். அவரது இளமைக்கால கேரக்டரில் எனது மகன் அபிஷேக்பச்சன் நடிப்பார் என்று இந்தி தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷிடம் கூறியுள்ளார்.

வித்யா பாலன்
இதையடுத்து தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷ், சென்னையில் பாலம் கல்யாணசுந்தரத்தை சந்தித்து பேசியுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாலம் கல்யாணசுந்தரத்தின் அம்மாவாக வித்யா பாலன் நடிக்கிறார். தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் இந்த படம் தயாராகிறது. யார் இயக்குகிறார் என்பது தெரியவில்லை.

ரஜினிகாந்த்
படத்துக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை பொதுத்தொண்டுக்கு வழங்க, பாலம் கல்யாணசுந்தரம் முடிவு செய்துள்ளாராம். பாலம் கல்யாணசுந்தரத்தை, 'எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க.. அப்பாதான் இல்லை. எனவே உங்களை அப்பாவாக தத்தெடுக்கிறேன்' என்று கூறி இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.


Click it and Unblock the Notifications











