தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக.. நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கும் அமிதாப்.. ஹீரோ எஸ்.ஜே.சூர்யா!

எஸ்.ஜே.சூர்யா படம் மூலம் நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க இருக்கிறார் அமிதாப்.

Recommended Video

முதல்முறையாக.. தமிழ்ப்படத்தில் நடிக்கும் அமிதாப்.. ஹீரோ எஸ்.ஜே.சூர்யா!

சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க இருக்கிறார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்.

குஷி, வாலி உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சமீபகாலமாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். மெர்சல் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த அவரது நடிப்பில் அடுத்ததாக நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜயுடன் 'சர்க்கார்', மற்றும் இறவாக்காலம் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

டிவிட்டர் அறிவிப்பு:

டிவிட்டர் அறிவிப்பு:

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது அடுத்தப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக டிவிட்டரில் அறிவித்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அது என்னவாக இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

நேரடி தமிழ்ப்படம்:

நேரடி தமிழ்ப்படம்:

அதன்படி, செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஜே.சூர்யா, 'தான் அடுத்ததாக தமிழ்வாணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாகவும்' தெரிவித்துள்ளார்.

இந்தியில் அறிமுகம்:

இந்தியில் அறிமுகம்:

இப்படம் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியிலும் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா அறிமுகமாக இருக்கிறார். டபுள் ஹீரோ சப்ஜெக்டில் இப்படம் உருவாக இருக்கிறது.

உயர்ந்த மனிதன்:

உயர்ந்த மனிதன்:

திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் பைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு உயர்ந்த மனிதன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் தமிழில் நேரடியாக அறிமுகம் ஆகும் படம் என்பதால் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருக்கின்றனர்.

ரஜினி அறிவிப்பு:

ரஜினி அறிவிப்பு:

இப்படம் பற்றிய அறிவிப்பை ரஜினி வீடியோ மூலம் அறிவித்தார். மார்ச் 2019 இல் இப்பட ஷூட்டிங் துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

வெற்றிக் கூட்டணி:

வெற்றிக் கூட்டணி:

முன்னதாக எஸ்.ஜே.சூர்யாவும், தமிழ்வாணனும் இணைந்து பணியாற்றிய கள்வனின் காதலி படம் வணிகரீதியாக நல்ல வெற்றி பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X