அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி, ஆலியா பட் நடிக்க.. கொரோனா விழிப்புணர்வுக்கு ஒரு குறும்படம்!
சென்னை: அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்க கொரோனா விழிப்புணர்வு குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா, டிவி தொடர், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல நடிகர்கள், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், நடிகைகள், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் உட்பட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஃபேமிலி என்று டைட்டில் வைத்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பது, ஆரோக்கியமாக இருப்பது, உடல்நலனை பேணுவது, வீட்டிலிருந்தபடி பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை பற்றி இந்தக் குறும்படம் பேசுகிறது. இதை பிரசூன் பாண்டே என்பவர் இயக்கி இருக்கிறார். இந்தக் குறும்படம் இன்று (06.04.20) இரவு 9 மணிக்கு சோனி டிவியில் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











