ரேகாவுடன் மீண்டும் நடிக்க நான் ரெடி: அமிதாப் பச்சன்
மும்பை: ரேகாவுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க தான் தயார் என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
ஆர். பால்கி இயக்கத்தில் தனுஷ், அக்ஷரா ஹாஸன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் ஷமிதாப் என்ற படத்தில் நடித்துள்ளனர். 33 ஆண்டுகள் கழித்து ரேகா அமிதாப் பச்சன் நடிக்கும் படத்தில் நடித்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் அறிமுக விழாவில் அமிதாப், தனுஷ், அக்ஷரா, ரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமிதாப்
ஷமிதாப் படத்தில் ரேகா இருந்தாலும் நானும் அவரும் சேர்ந்து வரும் காட்சிகள் இல்லை. படத்தை பார்க்கையில் உங்களுக்கு புரியும் என்றார் அமிதாப்.

ரேகா
மீண்டும் ரேகாவுடன் சேர்ந்து நடிக்க தான் தயாராக உள்ளதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

வெற்றி ஜோடி
1970கள், 80களில் பாலிவுட்டில் வெற்றி ஜோடியாக வலந்து வந்தவர்கள் அமிதாபும், ரேகாவும். அவர்களுக்கு இடையே காதல் என்று கூட ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இளையராஜா
சீனி கம், பாட ஆகிய படங்களை அடுத்து பால்கியின் ஷமிதாப் படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைத்துள்ளார். அமிதாப் பால்கியின் இயக்கத்தில் ஏற்கனவே சீனி கம் மற்றும் பா ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











