கபாலி ஹிந்தி ரீமேக்கில் அமிதாப்?
இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துவிட்டது கபாலி. மூன்று நாட்களிலேயே இருநூறு கோடிகளை வசூல் தாண்டிவிட்ட நிலையில் இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலுமே திரையரங்குகளை நிரப்பிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கபாலியை ஹிந்தியில் ரசிகர்கள் தரிசித்திருந்தாலும் நேரடியாக ஹிந்தியிலேயே ரீமேக் செய்யலாமா என்று ஒரு ஐடியா ஓடிக்கொண்டிருக்கிறதாம். முக்கியமாக ரஜினியின் தீவிர ரசிகரான அமிதாப் பச்சன் படத்தைப் பார்த்ததில் இருந்தே இதில் நாம் நடித்தால் எப்படி இருக்கும்? என்று யோசித்ததோடு மட்டும் அல்லாமல் நண்பர்களிடமும் ஆலோசனை கேட்டுவருகிறார்.
ரஜினியின் நிறைய படங்கள் அமிதாப் நடிக்க ஹிந்தியில் ரீமேக் ஆகியிருக்கின்றன. கபாலியில் ரஜினியின் எமோஷனல் போர்ஷன்கள் அமிதாப்புக்கு ரொம்பவே பிடித்துப்போனதால் படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறார் என்கிறார்கள்.
மகிழ்ச்சி!


Click it and Unblock the Notifications











