என்னாது வா விளையாடலாமா? பிரேமம் நாயகியை பிளே பண்ண கூப்பிடும் 'அமுல் பேபி' அமிதாஷ்!
சென்னை: பிரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் பேட்மிண்டன் விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
ஆனால், இங்கே விஷயமே அது இல்லை. அந்த போட்டோவுக்கு நம்ம 'அமுல்பேபி' அமிதாஷ் போட்டுள்ள கமெண்ட் தான் வைரலாகி வருகிறது.
தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனா நடித்தாரே அதே அமுல் பேபி தான்.

பிரேமம் நாயகி
பிரேமம் படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷின் கொடி படத்தில் ஏ சுழலியாக நடித்து கலக்கி இருப்பார். இன்ஸ்டாகிராமில் எப்போதுமே உலாவிக் கொண்டிருக்கும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

அலேக்கா தூக்கிய தம்பி
9.1 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் தனது தம்பி அக்ஷய் பரமேஸ்வரன் தன்னை அலேக்காக தூக்கிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அனுபமாவை தூக்கிய அக்ஷய்யின் ரியாக்ஷன் வேற லெவல்.

லூசுப் பொண்ணு
சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் பர்ஃபெக்ட் லூசு பெண்ணாக வலம் வருகிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அவர் செய்யும் குறும்புத்தனங்களை ரசிக்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர்.

ஜூம் பண்ணாதீங்க
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக பேட்மிண்டன் விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். மேலும், அந்த புகைப்படத்தை யாருமே ஜூம் பண்ணி பார்க்க வேண்டாம் என்றும், அப்படி பார்த்தால் தனது சொதப்பலான ஆட்டம் தெரிந்து விடும் என்பது போல கேப்ஷன் கொடுக்க ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

வா விளையாடலாம்
அனுபமா பரமேஸ்வரனின் இந்த புகைப்படத்தை பார்த்த உடனே வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் அமிதாஷ், "Come, Let's play. Anu vs Ami என கமெண்ட் போட்டு ரசிகர்களின் மொத்த கவனத்தையும் அவர் பக்கம் திருப்பி உள்ளார்.

என்ன விஷயமா இருக்கும்
நடிகர் அமிதாஷுக்கு அனுபமாவும் க்யூட்டாக ரிப்ளை போட என்ன விஷயமா இருக்கும் என ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர். அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள தள்ளிப் போகாதே படத்தில் அமிதாஷும் முக்கிய ரோலில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











