‘அட்சய திருதியை அன்று எங்களுக்கு கிடைத்த தங்கம்”.. மகளின் போட்டோ வெளியிட்ட அமித் பார்கவ்!

சீரியல் நடிகர் அமித் பார்கவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை: பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவ் மனைவி சிவரஞ்சனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அமித் பார்கவ். மிருதன், சார்லி சாப்ளின் 2 என வெள்ளித்திரையிலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார்.

Amith Bhargav blessed with baby girl

இவரது மனைவி ஸ்ரீரஞ்சனியும் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக பணி புரிந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், இத்தம்பதிக்கு கடந்த 7ம் தேதி அட்சய திருதியை அன்று அழகிய பெண் குழந்தைப் பிறந்துள்ளது. இத்தகவலை அமித் தனது டிவிட்டர் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

தங்களது மகளுக்கு இருவரின் பெயரையும் சேர்த்து வி என ஆரம்ப எழுத்து இருக்குமாறு பெயர் தேர்வு செய்துள்ளார்களாம் அமித்தும், ஸ்ரீரஞ்சனியும். ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் முடிவடையும் தருவாயில், இனி சீரியலில் நடிக்கப் போவதில்லை என அமித் அறிவித்திருந்தார். அடுத்ததாக அவர் படங்களில் நடிக்க இருக்கிறாரா இல்லை வெப் சீரிஸில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X