»   »  தம் அடித்த அமிதாப்: கோர்ட்டு சம்மன்

தம் அடித்த அமிதாப்: கோர்ட்டு சம்மன்

Subscribe to Oneindia Tamil

பனாஜி ஃபேமிலி என்ற இந்திப் படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சியில்அமிதாப் பச்சன் நடித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்குமாறு பனாஜி நீதிமன்றம் அமிதாப்புக்கு உத்தரவிட்டுள்ளது.

ஃபேமிலி படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சியில் அமிதாப் நடித்துள்ளார்.இதையடுத்து அமிதாப், படத் தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேர் மீது தேசிய புகையிலைஎதிர்ப்புக் கழகம் பனாஜி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில், திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள், குறும்படங்களில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெறக் கூடாது என சட்டம்உள்ளது. ஆனால் அதை மீறி பேமிலி படத்தில் அமிதாப் பச்சன் புகை பிடிப்பதுபோன்ற காட்சி வருகிறது. மேலும், ஒரு சிகரெட் கம்பெனியின் விளம்பரத்திற்காகஇவ்வாறு புகை பிடிப்பது போன்ற காட்சியில் அமிதாப் நடித்துள்ளார். இது சட்ட மீறல்ஆகும்.

அவர் புகை பிடிப்பது போன்ற விளம்பர போஸ்டர்களை தேசிய நெடுஞ்சாலை எண்17ல் மர்கோவா முதல் மபுசா வரை முக்கிய இடங்களில் வைத்துள்ளனர். நாட்டின்வேறு பல பகுதிகளிலும் இதுபோல வைக்கப்பட்டுள்ளது. எனவே அமிதாப்உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 29ம் தேதி நேரில் ஆஜராகி புகை பிடிப்பதுபோன்ற காட்சியில் நடித்தது ஏன் என்பது குறித்து விளக்க வேண்டும் என கூறிஅமிதாப்புக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இந் நிலையில் அவ்வாறு நடித்ததற்கும் போஸ் கொடுத்ததற்கும் வருத்தம்தெரிவித்துள்ளார் அமிதாப்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil