மனஉளைச்சல்.. ஒரு வருடம் ஓய்வெடுக்க அமிசாப்பச்சன் முடிவு
மும்பை: வருகிற மே மாதம் வரை தனக்கு இருக்கும் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சுமார் ஒரு வருட காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறேன் என்று பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது சத்யகிரஹா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரகாஷ் ஜா இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற்று வருகிறது. மேலும், ஜூலை 25ந் தேதி நடைபெறும் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப் கலந்து கொள்கிறார். அவருக்கு இந்த விழாவில் சிறப்பு கவுரவம் அளிக்கப்படுகிறது.

கவுரவ அங்கீகாரம்:
இது குறித்து தனது பிளாக்கில் நடிகர் அமிதாப் பச்சன், 'மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு எனக்கு கவுரவம் அளிக்கப்பட இருக்கிறது. அந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன்.

சத்யகிரஹா படம்:
அதன் பின்னர் போபாலில் நடைபெறும் சத்யகிரஹா திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். அதன் இறுதி கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் முடிவடைகிறது.

பிரீமியர் ஷோ:
பின்பு உடனடியாக நியூயார்க் நகருக்கு பயணமாகிறேன். அங்கு மே முதல் தேதியில் வெளியிடப்படும் தி கிரேட் கேட்ஸ்பை திரைப்படத்தின் முதல் காட்சியில் (பிரீமியர் ஷோ) கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஓய்வு:
அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்து கொண்டு ஒரு வருடம் ஓய்வில் இருக்க முடிவு செய்துள்ளேன்.

மன உளைச்சல்:
நான் எங்கிருக்கிறேன்? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நான் ஏன் இவ்வாறு இருக்கிறேன்? என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து என்னுள் எழுந்து மனஉளைச்சலை ஏற்படுத்துவதால் இந்த ஓய்வு அவசியமாகிறது என்றும் அதில் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











