இந்தியில் தயாராகிறது மஞ்சப்பை... ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப் நடிக்கிறார்?
மும்பை: விமல், ராஜ்கிரண் நடிப்பில் தயாரான மஞ்சப்பை படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் விமலின் கிராமத்து தாத்தாவாக நடிப்பில் அசத்தியிருப்பார் ராஜ்கிரண்.
தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் 'ரீமேக்' செய்யப்பட உள்ளது. அதற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

3 மொழிகளில் ரீமேக்...
இந்தி, கன்னடம், ரீமேக் உரிமையை ராக்லைன் வெங்கடேசும், தெலுங்கு உரிமையை தாசரி நாரயாணராவும் வாங்கி உள்ளனர்.

தாசரி நாராயணராவ்...
தெலுங்கில் ராஜ்கிரண் நடித்த வேடத்தில் தாசரி நாராயணராவ் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், விமல் வேடத்தில் நடிக்க ஞானி, விஷ்ணு மஞ்சு பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிகிறது.

இந்தியில் அமிதாப்...
இதற்கிடையே இந்தியில் ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்மதம் ?
மேலும், விரைவில் தமிழ் மஞ்சப்பை படத்தை அமிதாப் பார்க்க உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அதில் வரும் ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











