விஜய் - திரிஷா விவகாரம்.. ஏங்க அதெல்லாம் அவரவர் உரிமைங்க.. போட்டு தாக்கிய பிரபலம்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று மாநிலத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார் விஜய். அவர் பதவியேற்றபோது திரிஷா வந்தது அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கியது எல்லாம் பெரிய பேசுபொருளாகின. அதேபோல் தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் இரண்டு பேரும் ஒரு திருமணத்துக்கு வந்ததும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அவர்களது விவகாரம் குறித்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா சமீபத்திய பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார்.
விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டில் சக்சஸ்ஃபுல் ரீல் ஜோடிகளில் ஒன்று. கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ என ஐந்து படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலான படங்கள் ஹிட்தான். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கடந்த சில வருடங்களாகவே இரண்டு பேரையும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் பரவின. அதனை இரண்டு பேருமே கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் விஜய்யின் மனைவி தாக்கல் செய்த விவாகரத்து மனுவும், அதில் அவர் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.

ஜோடியாக வருகை: அந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஜய்யும், திரிஷாவும் ஒரே நிறத்தில் உடையை அணிந்துகொண்டு திருமணம் ஒன்றுக்கு வந்து சென்றார்கள். அப்போதிருந்து அவர்கள் பற்றிய கிசுகிசுக்கள் மேற்கொண்டு பரவின. அதேபோல் தமிழ்நாடு தேர்தலில் வென்று முதலமைச்சராக விஜய் பதவியேற்றதையும், அதற்கு பிறகு அவர் பேசியதையும் திரிஷா முதல் வரிசையில் அமர்ந்து கண்கள் கலங்கி கேட்டுக்கொண்டிருந்ததும் பெரிய கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
தொடரும் சர்ச்சை: அதேபோல் திரிஷாவுக்கும், விஜய்க்கும் என்ன மாதிரியான உறவு இருந்தால் உங்களுக்கு என்ன? அவர்களுடைய பெர்சனல் வாழ்க்கையில் எதுவும் தலையிட வேண்டாம்; அவர்கள் நெருங்கிய நட்பில் மட்டுமே இருக்கிறார்கள் என்று தவெகவினர் தொடர்ந்து கூறுகிறார்கள். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர்கள் குறித்து பேசியிருக்கிறார்.
சிவா பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "எதுவாக இருந்தாலும் ஒரு மனிதனை பாதிக்கத்தான் செய்யும். கரூர் சம்பவம் அவரை மாத கணக்கில் பாதித்தது. இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் நான் எத்தனையோ பேட்டிகள் கொடுத்திருக்கிறேன். அதில் எல்லாம் யாரையும் குறை சொல்லமாட்டேன். யாருடைய பெர்சனல் விஷயத்தையும் பேசமாட்டேன். அதெல்லாம் அவரவர் உரிமை. யாரும் அதை பேசக்கூடாது என்பது என் கருத்து. அவரவர் பார்வை மாறத்தான் செய்யும். பொதுவான கோணத்தில் சிந்திக்க வேண்டாம்.
எனது வீட்டு நிகழ்ச்சிக்கு விஜய் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ரொம்ப ஆசைப்பட்டு நிகழ்ச்சிக்கு அழைத்தேன். இங்கேயும் பெரிய பிரச்னைகள் எதுவும் வரக்கூடாது என்று நினைத்தேன். அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. சிம்ப்பிளாக வந்துவிட்டு சென்றார். அவர் நினைத்தால் செய்து காட்டுவார். அது அவருடைய மைண்ட் செட். கோட் படத்தில் அமைந்ததெல்லாம் உண்மையிலே நடந்தது ஒரு அசரீரி மாதிரிதான். இந்த மாதிரி ஐடியாக்களை எல்லாம் வெங்கட் பிரபு நிறைய கொடுப்பார். விஜய் அதையும் ரசிக்கத்தான் செய்திருக்கிறார். விஜய் தேர்தலில் வென்றதன் மூலம் எல்லா துறைகளும் சுதந்திரமாக செயல்படலாம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
