twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அம்மா இல்லை என்றால் இந்த தமிழகம் இல்லை...: ராதாரவி

    By Mayura Akilan
    |

    சென்னை: தமிழகமே முதல்வர் அம்மாவை நம்பித்தான் இருக்கிறது. அவர்கள் இல்லை என்றால் தமிழகம் இல்லை. அம்மாதான் நிரந்தர முதல்வர் என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதல்வருக்கு ஆதரவாகவும் தமிழ்திரை உலக நடிகர், நடிகையர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். கூட்டத்தில் முதல்வருக்கு ஆதரவாக கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

    இறுதி தீர்ப்பு அல்ல

    இறுதி தீர்ப்பு அல்ல

    போராட்டத்தில் பங்கேற்றுள்ள நடிகர் ராதாரவி, நீதிபதியைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. உயர்நீதிமன்றம் இருக்கிறது அங்கு நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார்.

    எப்படி இருக்கிறார்களோ?

    எப்படி இருக்கிறார்களோ?

    தண்டனை அறிவித்த உடன் யாருக்கும் காட்டாமல் சிறைக்கு அனுப்பிவிட்டனர். அங்கே அம்மா எப்படி இருக்கிறார்களோ? என்ன நிலையில் இருக்கிறார்களோ தெரியவில்லை.

    நிரந்தர முதல்வர்

    நிரந்தர முதல்வர்

    மிகப்பெரிய ஊழல் செய்தவர்கள் எல்லோரும் இந்த தீர்ப்பை கேட்டு அமைதியாக இருக்கின்றனர். அம்மா இல்லை என்றால் தமிழகமே இல்லை. அவர்தான் நிரந்தரமுதல்வர் என்றார்.

    கறுப்பு நாள்

    கறுப்பு நாள்

    தொடர்ந்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், செப்டம்பர் 27ஆம் தேதி ஒரு கறுப்பு நாள் என்றார். அன்றைய தினம் தமிழக மக்களின் தலையில் இடி விழுந்துவிட்டது என்றும் மன்சூர் அலிகான் கூறினார்.

    English summary
    Actor Radha Ravi said, Amma Jayalalitha is a permanent Chief Mininster in Tamil Nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X