»   »  தனுஷின் 'அம்மா கணக்கு' தளபதி ரசிகர்களுக்கானது... கொண்டாடும் ரசிகர்கள்!

தனுஷின் 'அம்மா கணக்கு' தளபதி ரசிகர்களுக்கானது... கொண்டாடும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் அம்மா கணக்கு.

இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தன்னுடைய வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.


அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அம்மா-மகள் உறவை எடுத்துக் கூறும் விதமாக வெளியாகியிருக்கும் அம்மா கணக்கு, ரசிகர்களைக் கவர்ந்ததா? என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.


36 வயதினிலே

அம்மா-மகள் இடையேயான உறவை எடுத்துக் கூறியிருக்கும் அம்மா கணக்கு 36 வயதினிலே படத்தின் 2 வது பாகம் போல இருப்பதாக விஷ்ணு கூறியிருக்கிறார்.


தனுஷுக்கு நன்றி

அம்மா கணக்கு என்ற சிறந்த படத்தைக் கொடுத்ததற்காக தனுஷுக்கு நன்றி என கவியரசன் தனுஷை வாழ்த்தியிருக்கிறார்.


அமலாபால்

அமலாபால் வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொள்ளும்படியான நடிப்பை வழங்கியிருப்பதாக ஸ்ரீ நந்து பாராட்டியிருக்கிறார்.


தளபதி

அம்மா கணக்கு படத்தின் தொடக்கத்தில் விஜய் பாடல்கள் இடம் பெற்றிருப்பதை ராம்குமார் சுட்டிக்காட்டி பாராட்டியிருக்கிறார்.


சமுத்திரக்கனி

சாட்டை படத்திற்குப் பின் சிறந்த நடிப்பை வழங்கியிருப்பதாக சந்தோஷ் நடிகர் சமுத்திரக்கனியை பாராட்டியிருக்கிறார்.மொத்தத்தில் அம்மா கணக்கு நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.English summary
Amala Paul, Revathi, Samuthirakani Starrer Amma Kanakku Released Today Worldwide. Written and Directed by Ashwini Iyer Tiwari - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil