»   »  கடவுளே, கடவுளே, கடவுளே: இது தான் கோலிவுட்டின் தற்போதைய நிலை

கடவுளே, கடவுளே, கடவுளே: இது தான் கோலிவுட்டின் தற்போதைய நிலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் தமிழ் திரையுலகினர் கடவுளே, கடவுளே என்று அம்மாவுக்காக பிரார்த்தனை செய்தபடி உள்ளனர்.

உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.

Amma: Kollywood in prayer mode

இதையடுத்து அவரின் நிலை மோசமாகியுள்ளது. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகமும், மிக மிக மோசமாக உள்ளது என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு சென்ற சாதனை மங்கை அம்மா அவர்கள் குணமடைந்து வர வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

கோலிவுட்டை வாழ வைக்கும் அம்மா அதிசயம் நடந்து பிழைத்து வந்து மீண்டும் ஆட்சி நடத்த வேண்டி திரையுலக பிரபலங்கள் கடவுளே, கடவுளே என்று டிவியில் செய்தியை பார்த்தபடி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

English summary
Kollywood people are busy praying for CM Jayalalithaa whose health condition is bad according to Apollo hospital where she is being treated.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil