எதுக்கும் பொறுமையே இல்லை.. பரபரப்பு புகார்.. பிக் பாஸில் இருந்து அந்த பிரபலம் திடீர் வெளியேற்றம்!

By

ஐதராபாத்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரபல சினிமா பிரபலம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆம் சீசன் அட்டகாசமான சென்று கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்குள் நடக்கும் மோதலும் முட்டலும் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

கவர்ந்து வருகிறார்

கவர்ந்து வருகிறார்

அது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆச்சரியத்தையும் அளிக்கிறது. நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமாக பேசி, பிக் பாஸ் போட்டியாளர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

சென்டிமென்ட் கமல்

சென்டிமென்ட் கமல்

அவருக்கு நேற்று 66 வது பிறந்தநாள். இதை அவர் ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் சிறப்பாக கொண்டாடினர். பிக் பாஸ் டீமும் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது, நேற்று. பிக் பாஸ் ஏற்பாடு ஸ்பெஷல் கேக் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது சென்டிமென்டாக பேசினார். இது பரபரப்பானது.

தெலுங்கு பிக்பாஸ்

தெலுங்கு பிக்பாஸ்

தமிழைப் போலவே, தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்குகிறார். இடையில் வைல்ட் டாக் படப்பிடிப்புக்காக அவர் மணாலி சென்றதால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

தொகுத்த சமந்தா

தொகுத்த சமந்தா

இதையடுத்து அவர் மருமகளும் நடிகையுமான சமந்தா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்குப் பதில் பங்கேற்றார். அது வரவேற்பை பெற்றது. சமந்தா பங்கேற்ற நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் சிறந்த இடத்தைப் பிடித்ததாகக் கூறப்பட்டது.

தமிழில் வாழ்த்து

தமிழில் வாழ்த்து

பின்னர், சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்த நடிகர் நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று மீண்டும் தொகுத்து வழங்கினார். அவர் நேற்று கமல்ஹாசனுக்கு பிக் பாஸ் வீட்டில் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.

கூறப்பட்ட நிலையில்

கூறப்பட்ட நிலையில்

இந்நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில், நாகார்ஜுனாவிடம் வீட்டில் கலந்து கொண்டவர்கள் பரபரப்பு புகார்களை கூறினார்கள். அபிஜித் உட்பட பலர் அம்மா ராஜசேகர், எதையும் பொறுமையாகக் கேட்பதில்லை என்று கூறினர். ஏற்கனவே அவர், பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது வெளியேற்றப் பட்டுள்ளார்.

இயக்குனர் அம்மா

இயக்குனர் அம்மா

வெளியேற்றப்பட்ட நடன இயக்குனரும் இயக்குனருமான 'அம்மா' ராஜசேகர், சென்னையை சேர்ந்தவர். தமிழில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். ரணம் உள்பட சில படங்களை, தெலுங்கில் இயக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X