twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அம்மா... அம்மா... எந்தன் ஆருயிரே...! மனதை உலுக்கும் சில "அம்மா" பாடல்கள்!

    |

    சென்னை: அம்மா... நினைத்தாலே மனதை இதமாக்கும் வார்த்தை. தாயினும் சாலப் பரிந்து என்று சும்மாவா சொன்னார்கள். தாயைக் கடவுளுக்கு நிகராக சொல்வார்கள்.

    இப்போது எங்கு பார்த்தாலும் "அம்மா" பேச்சாக உள்ளது. இந்த நேரத்தில் நமது மனதில் சில புகழ் பெற்ற அம்மா பாடல்கள் வந்து போனது.

    அம்மா குறித்த பாடல்களை நினைக்கும்போதெல்லாம் இந்தப் பாடல்கள்தான் ஒவ்வொருவர் மனதிலும் கட்டாயம் வந்து போகும்.

    இதோ அவற்றில் சில பாடல்கள்...

    தாயில்லாமல் நானில்லை

    தாயில்லாமல் நானில்லை

    எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இணைந்து நடித்த அடிமைப் பெண் படத்தில் இடம் பெற்ற பாடல். எம்.ஜி.ஆர் பாடுவது போல வரும் இப்பாடலை எழுதியவர் மறைந்த கவிஞர் வாலி. டிஎம்.செளந்தரராஜன் குரல் கொடுத்திருப்பார்.

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே

    வாலி எழுதிய இன்னொரு அருமையான பாடல். மன்னன் படத்தில் ரஜினிகாந்த் பாடுவது போல வரும் பாடல். குரல் கொடுத்தவர் ஜேசுதாஸ். இளையராஜா இசையில் வந்த இந்தப் பாடலைக் கேட்காத காதுகளே கிடையாது என்று கூறலாம்.

    அம்மா... அம்மா...

    அம்மா... அம்மா...

    இதுவும் ரஜினி நடிப்பில் வெளியான படத்தின் பாடல் தான். உழைப்பாளி படத்தில் ரஜினி பாடும் பாடல் இது.

    நானாக நானில்லை தாயே...

    நானாக நானில்லை தாயே...

    இது கமல்ஹாசன் படப் பாடல். படம் தூங்காதே தம்பி தூங்காதே. இதற்கும் இசை இளையராஜாதான். இளையராஜாவே இந்தப் பாடலையும் பாடியிருப்பார். வாலி பாடல்தான் இதுவும்.

    ஆராரிராரோ

    ஆராரிராரோ

    ஆராரிராரோ நான் இங்கு பாட.. தாயே நீ கண்ணுறங்கு..இது அமீரின் ராம் படப் பாடல். சினேகன் எழுதி, ஜேசுதாஸ் பாடிய பாடல்.

    அம்மா என்றாலே

    அம்மா என்றாலே

    சூர்யா நடித்த நந்தா படத்தில் வந்த பாடல். யுவன் ஷங்கர் ராஜா இசை. இளையராஜா பாடியிருப்பார்.

    அம்மா... அம்மா... அம்மா

    அம்மா... அம்மா... அம்மா

    தனுஷ் நடித்த வேலையில்லாப் பட்டதாரி படத்தில் வரும் பாடல் இது. பொதுவாக காதல் தோல்விகளால் கசிந்துருகும் தனுஷ், இப்பாடலில் தாய்ப்பாசத்தில் பாடும் பாடல் இது.

    அம்மா என்றால் அன்பு

    அம்மா என்றால் அன்பு

    அதிமுகவினரின் அம்மாவான ஜெயலலிதா பாடிய பாடல். வாலிதான் இப்பாடலையும் எழுதியவர். படம் அடிமைப் பெண். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இதுதான்.

    தாயே உன்னை

    தாயே உன்னை

    சினேகன் எழுதிய பாடல் இது. படம் சேரன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த பாண்டவர் பூமி. இசை பரத்வாஜ்.

    அன்னை மடி

    அன்னை மடி

    பி.சுசீலா பாடிய அழகுப் பாடல்களில் இதுவும் ஒன்று. கற்பகம் படப் பாடல். வாலி எழுதிய பாடல். அத்தை மடி மெத்தையடி பாடலின் இன்னொரு வடிவம் இது.

    நிறைய இளையராஜாப் பாடல்கள்

    நிறைய இளையராஜாப் பாடல்கள்

    அம்மா பாடல்களை தமிழ் சினிமாவில் நிறையத் தந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா என்று கூறும் அளவுக்கு அவரது பல பாடல்களைக் குறிப்பிடலாம்.

    English summary
    A round up of amma songs that was released in tamil movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X