இது ரொம்ப சக்திவாய்ந்த அம்மனா இருக்குமோ?: பிக்பாஸ் ஜூலி படத்தின் டீசர்

சென்னை: ஜூலி நடித்துள்ள திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் கவனம் பெற்று அதிக பாராட்டுக்களைப் பெற்றவர் ஜூலி. அவரை தூக்கிவைத்து கொண்டாடியவர்களெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு அவரின் நடவடிக்கை பிடிக்காமல் கடுப்பாகினர்.

Amman thayee teaser released!

நல்லதோ கெட்டதோ, சரியோ தவறோ எது எப்படி இருந்தாலும் பிக்பாஸ் மூலமாக ஓவியாவிற்கு அடுத்தபடியாக ஜுலி பிரபலமானார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாக உள்ள அம்மன் தாயி திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது.

பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா.. அவ அக்கா தங்கை ஏழு பேரை அழைக்கட்டுமா என்ற சிங்கிள் டிராக் ரிலீஸாகி வைரலானது. மடப்புரம் பத்ரகாளி, சமயபுரம் மாரியம்மா, யானைக்குழாய் தீர்த்தக்காரி என அம்மன் பெயர்களை பட்டியலிடப்பட்ட பாடலாக அது இருந்தது.

இந்த நிலையில் அம்மன் தாயி திரைப்படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர். "உலக பிரசித்திப் பெற்ற வடக்கம்பட்டி திரு முனியாண்டி சாமி ஆசியுடன்" என டைட்டில் போட்டு துவங்கும் டீசர் மிரட்டும் வகையில் உள்ளது.

மண்டை ஓட்டிலிருந்து ஆவி போவது, பாம்பு படமெடுப்பது, இருட்டுக்குள் பலர் ஓடுவது, ஒரு பெண் அடிபட்டு ரத்தத்தோடு கிடப்பது என வேகமாக நகர்கிறது. இறுதியில் அம்மன் வேடத்தில் இருக்கும் ஜூலி, ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார். இந்த டீசர் 31 நொடிகள் மட்டுமே ஓடுகிறது. இதைப் பார்க்கும்போது அதிபயங்கரமான அம்மன் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தின் மூலம் ஜூலிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது.

ஒரு ஜூலியை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த ஜூலி வெறியர்களுக்கு பூஸ்ட் தரும் வகையில் இப்படத்தில் ஜூலி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கேசவ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ்வரனும், சந்திரஹாசனும் இணைந்து இயக்கியுள்ளனர். விரைவில் திரைக்கு வர உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X