மணி பாரதியின் “பேட்டரி “ … நாயகியாகும் அசுரன் புகழ் அம்மு அபிராமி
சென்னை : மணி பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் பேட்டரி. இப்படத்தில் செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். "அசுரன்" படப்புகழ் அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்க உள்ளார். படப்பிடிப்பிற்கான பூஜை சென்னையில் போடப்பட்டது.
ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் "பேட்டரி"இப்படத்திற்கு மணி பாரதி கதை எழுதி இயக்குகிறார். பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் லிங்குசாமி படக்குழுவினரை வாழ்த்தினார்.

அப்போது பேசிய இயக்குநர் மணிபாரதி, நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிப்படமாக அமையும். இப்படி உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இத்திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் செலவு என்பது ஒரு எளிதில் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. அப்படிப்பட்ட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடக்கும் போது அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அந்த முறைகேட்டால் ஒரு குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்றதை நெஞ்சம் பதைபதைக்க சொல்லும் ஒரு க்ரைம் திரில்லர் படம் பேட்டரி என்று இயக்குனர் மணிபாரதி கூறினார்.

இப்படத்தில் கதாநாயகனாக செங்குட்டுவன் நடிக்கிறார். அசுரன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்த அம்மு அபிராமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். "கைதி" படத்தில் மக்களிடம் கைத்தட்டல் பெற்ற ஜார்ஜ் மரியான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இயக்குநர் மணிபாரதி பிரபல இயக்குநர்கள் வஸந்த், மணிரத்னம் , சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











