செந்தில் கணேஷ் ராஜலட்சுமிய எப்படி பாடவச்சோம் தெரியுமா? இசையமைப்பாளர் அம்ரிஷ்!

சின்ன மச்சான் ஹிட்டானது மகிழ்ச்சியளிப்பதாக அம்ரிஷ் கூறியுள்ளார்

Recommended Video

செந்தில் கணேஷ் ராஜலட்சுமிய எப்படி பாடவச்சோம் தெரியுமா? இசையமைப்பாளர் அம்ரிஷ்!-வீடியோ

சென்னை: சின்ன மச்சான் பாடல் ஹிட்டானது மகிழ்ச்சியளிப்பதாக இசையமைப்பாளர் அம்ரிஷ் தெரிவித்துள்ளார்.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, அடா ஷர்மா மற்றும் பலர் நடிக்கும் படம் சார்லி சாப்ளின் 2. இப்படம் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது.

Amrish about Chinna Machan song making!

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் எண்பது லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இப்பாடலை சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரான சென்ந்தில் கணேஷ் அவருடைய மனைவி ராஜலக்‌ஷ்மியுடன் சேர்ந்து பாடியுள்ளார். செல்ல தங்கையா பாடல் எழுதியுள்ளார்.

இந்த பாடல் இடம்பெறும் இடம் குறித்து இயக்குனர் சக்தி சிதம்பரம் விளக்கியபோது, தயாரிப்பாளர் சிவாதான் செந்தில் ராஜலக்‌ஷ்மியை பாட வைக்கலாம் என சொன்னார். தொலைக்காட்சியில் அவர்கள் பாடியதை பார்த்துள்ளேன். அவர்கள் என முடிவானதுமே இந்த பாடல் அவர்களின் பாடலாக வரவேண்டுமென முடிவு செய்துவிட்டேன்.

பொதுவாக தமிழ் ரசிகர்களிடையே சின்ன மச்சான் என்ற வார்த்தை பழக்கப்பட்ட ஒன்று. அதனால் அந்த வார்த்தையை வைத்து பாடல் உருவாக்க திட்டமிட்டோம். மேடைகளில் பாடிய அவர்களுக்கு இதுதான் முதல் ஸ்டுடியோ அனுபவம். அதனால் பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தோம், ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு சிறப்பாக பாடினர்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் பாடகர்களை தனித்தனியே பாடவிட்டு பதிவு செய்வதுதான் வழக்கம். ஆனால் இது கேள்வி பதில் போல அமைக்கப்பட்டுள்ளதால் இருவரையும் ஒன்றாக பாடவைத்து பாடலை உருவாக்கினோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் பிரபுதேவா எழுதியுள்ள "இவள இவள ரொம்ப பிடிச்சிருக்கு" என்ற பாடலை அம்ரிஷ் பாடியுள்ளார். இப்படத்தின் பாடல்களை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அம்ரிஷ் இப்போது த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படத்திற்கும் சன்னி லியோனின் வீரமா தேவி திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X