உங்களுக்கு நல்ல மனசுங்க..லாக்டவுனால் வேலை இழப்பு..5 மாத வாடகையை வேண்டாம் என மறுத்த பிரபல நடிகை!

By

மும்பை: லாக்டவுன் காரணமாக வேலை இல்லாததால், தனது வீடுகளில் குடியிருப்பவர்களிடம் 5 மாத வாடகையை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்திருக்கிறார், பிரபல நடிகை.

Recommended Video

Aditirao Hydari dancing tribute to her guru | Sufiyum Sujathayum, Hey Sinamika

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிறது. இந்த வைரஸுக்கு பலியாகிறவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா

உலக அளவில் கொரோனாவால் 85 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா அதிகமாகப் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

கொரோனா, மேலும் வேகமாகப் பரவி வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே லாக்டவுன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் பலரின் வாழ்வாதாரம் சிக்கலாகி இருக்கிறது. தினசரி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.

வாடகை வேண்டாம்

வாடகை வேண்டாம்

இந்நிலையில், பிரபல நடிகை அம்ரிதா ராவ். தனது வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் மார்ச் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை வாடகை வேண்டாம் என்று கூறி இருக்கிறார். இவர், இந்தியில், ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் அஜய்தேவ்கன் நடித்த பகத் சிங், ஷாருக்கானின் மை ஹூன் னா, அமிதாப் பச்சன், சஞ்சய் தத் நடித்த தீவார், ஷாகித் கபூரின் விவாஹ் உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு, ஒளிப்பதிவு

நடிப்பு, ஒளிப்பதிவு

தெலுங்கிலும் நடித்துள்ள இவர், சமீபத்தில் வெளியான தாக்கரே பயோபிக்கில் மீனா தாக்கரேவாக நடித்திருந்தார். இவருக்கு மும்பையில் சில வீடுகள் உள்ளன. இதுபற்றி நடிகை அம்ரிதா ராவ் கூறும்போது, எனது வீடுகளில் வாடகைக்கு இருக்கும் சிலர், நடிப்பு, ஒளிப்பதிவு போன்ற தொழில்களில் உள்ளனர். இவர்களுக்கு மாத சம்பள உத்தரவாதம் இல்லை.

உதவ வேண்டும்

உதவ வேண்டும்

கொரோனா தொற்று மோசமான சூழ்நிலையை உருவாக்கி இருப்பதால், அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பியுள்ளனர். இந்தச் சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிவதால், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் வாடகையை வாங்கவில்லை. அதே நேரம் வேலையை இழக்காமல் இருப்பவர்கள், வாடகையை கொடுத்துவிடலாம். லாக்டவுனை சாக்காகப் பயன்படுத்தி கொடுக்காமல் இருக்கக் கூடாது' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X