Don't Miss!
- News
"சீனே மாறிடுச்சே".. ஒருத்தருமே கிட்ட இல்லயாம்.. தனித்து விடப்பட்டாரா சசி.. காரணமே "அவர்"தான் போலயே
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Finance
இந்தியா-வை தேடி வரும் உலக நாடுகள்.. டாலர்-க்கு செக்.. அமெரிக்கா திண்டாட்டம்..!
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அப்பாவுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கான்.. அசீம் போல நடித்து காட்டி அசத்திய அமுதவாணன் மகன்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் 79வது நாள் சொந்தங்கள் வரும் ஃப்ரீஸ் டாஸ்க்காக மாறி உள்ளது. மைனாவின் கணவர் மற்றும் மகன் வந்து சென்ற நிலையில், அடுத்து அமுதவாணனின் குடும்பத்தினர் வந்துள்ளனர்.
காதல் பொங்க அமுதா என அழைத்துக் கொண்டே அமுதவாணனின் மனைவி வீட்டிற்கு மூன்று மகன்களுடன் வந்த காட்சிகள் தற்போது வெளியான 3வது ப்ரமோவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
அதிலும், பெரிய பையன் அசீம் மற்றும் விக்ரமன் போல நடித்துக் காட்டியது ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளது.
பிக்
பாஸ்
ஷோக்கும்
உனக்கும்
தகுதியே
இல்லை...கணவரால்
அவமானப்பட்ட
மைனா!

ஃப்ரீஸ் டாஸ்க்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் குடும்பங்கள் என்ட்ரி கொடுக்கும் ஃப்ரீஸ் டாஸ்க் அரங்கேறி உள்ளது. அதற்காகத்தான் மணிகண்டன் மற்றும் மைனாவை பிக் பாஸ் டீம் இத்தனை வாரங்கள் சேவ் செய்தது என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். முதல் நாளிலேயே மைனா நந்தினியின் கணவர் மற்றும் குழந்தை வந்து அதனை தெளிவாக உறுதிபடுத்தி விட்டனர்.

அமுதவாணன் ஃபேமிலி
மைனா நந்தினி குடும்பத்தை தொடர்ந்து ஷிவின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தனர். அதன் பின்னர் அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகள் வந்த காட்சிகள் தற்போது 3வது ப்ரமோவில் வெளியாகி உள்ளன. இத்தனை வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடித்த அமுதவாணன் இந்த நொடிக்காக ரொம்பவே காத்திருந்தார்.

செம ரொமான்ஸ்
அமுதா என அழைத்தபடியே உள்ளே வந்த அமுதவாணனின் மனைவி அவரை கட்டித் தழுவி, முத்த மழை பொழிந்து விட்ட காட்சிகளும் ப்ரமோவில் இடம்பெற்றுள்ளன. அமுதவாணனின் குழந்தைகளும் உள்ளே வந்துள்ள நிலையில், கலகலப்பான வீடாக பிக் பாஸ் வீடு மாறி உள்ளது.

அசீம் போல அசத்திய அமுது மகன்
அமுதவாணனை விட கொஞ்சம் நேரம் உள்ளே வந்த அவர் மூத்த மகன் செம ஸ்கோர் செய்து விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும், எல்லாரும் என்ன அட்டாக் பண்றாங்க.. என அசீம் போல அவர் நடித்துக் காட்டியது அசீம் உள்பட அனைவரையுமே சிரிப்பலையில் ஆழ்த்தியது பார்க்கவே ரொம்ப சந்தோஷத்தை தருகிறது.

கக்கூஸ் கமகமக்குது
கடைசியாக விக்ரமன் போல இமிடேட் செய்த அமுதவாணன் மகன் நான் க்ளீன் பண்ணதால கக்கூஸ் எப்படி கமகமக்குது பாருங்க என பேசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஹாப்பி ஆக்கி உள்ளார். இன்னும் விக்ரமன், மணிகண்டன், அசீம், ரச்சிதா, ஏடிகே மற்றும் கதிர் வீட்டில் இருந்து எல்லாம் யார் யார் வரப் போறாங்க என ரசிகர்கள் வெயிட்டிங்!