'AB பீட்ஸ் C' அமிதாப் பச்சன் வீடு திரும்பியதை கொண்டாடும் அமுல்.. டூடுல் வெளியிட்டு அசத்தல்!

மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை அமுல் நிறுவனம் டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

Recommended Video

Aishwarya Rai & Aradhya Tested Negative and Discharged

பாலிவுட் சினிமாவின் முடி சூடா மன்னன் என அழைக்கப்படும் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கடந்த மாதம் 11ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மூச்சு திணறல்

மூச்சு திணறல்

இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 17-ம் தேதி ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் ஐஸ்வர்யா ராயிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ரசிகர்கள் கலக்கம்

ரசிகர்கள் கலக்கம்

10 நாட்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற ஐஸ்வர்யாராய், ஆராத்யா இருவரும் கடந்த 28 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினர். ஆனால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் பாலிவுட் ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர்.

வீடு திரும்பினார்

வீடு திரும்பினார்

அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் கடைசியாக நடத்தப்பட்ட சோதனையில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை அமிதாப் பச்சன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமுல் டூடுல்

அமுல் டூடுல்

இதனை அமுல் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இதற்காக பிரத்யேக டூடுலையும் வெளியிட்டுள்ளது.
அதில் கையில் மொபைல் போனுடன் அமிதாப் பச்சன் சோஃபாவில் அமர்ந்துள்ளார். அமுலின் ஐகானிக் சிறுமி அவருக்கு அருகில் நிற்கிறார். அமுல் அமிதாப் பச்சனை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு நகைச்சுவையான வாசகத்தையும் சேர்த்துள்ளது.

ஏபி பீட்ஸ் சி

ஏபி பீட்ஸ் சி

அதாவது AB beats C என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 'ஏபி' என அமிதாப் பச்சனையும், 'சி' என கொரோனா வைரஸையும் குறிப்பிட்டு அமிதாப் பச்சன் கொரோனாவை தாக்கிவிட்டார் என தெரிவித்துள்ளது. மேலும் "வீடு திரும்பும் பரிசு," என்றும் அந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி அமுல்

நன்றி அமுல்

அமுலின் இந்த டூடுலை பார்த்து நெகிழ்ந்து போயுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன். இதற்காக அவர் தன்னு
டைய டிவிட்டர் பக்கத்தில் அமுல் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில் "உங்கள் தனித்துவமான போஸ்டர் பிரச்சாரங்களில் தொடர்ந்து என்னைப் பற்றி சிந்தித்ததற்கு நன்றி அமுல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X