பாலா விளம்பரத்திற்காக பன்றான்.. மாஸாக அரசியலுக்கு வரும் விஜய்.. அமுதவாணன் பேட்டி
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடங்கி 1 வருடம் கடந்து விட்ட நிலையில் இதற்கு அவரது ரசிகர்கள் தொண்டர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். விஜய்க்கு திரை பிரபலங்கள் பலரும் தன்னார்வலராக வந்து பணியாற்ற தயாராக இருக்கின்றனர். குறிப்பாக நடிகர் ஸ்ரீமன், தாடி பாலாஜி உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் டிவி நிகழ்ச்சியில் காமெடி செய்து கலக்கி வரும் அமுதவாணன் விஜய் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
நடிகர் விஜய் கடந்தாண்டு தவெக என்ற கட்சியை தொடங்கி பிரம்மாண்ட அளவில் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் அலைகடல் என திரண்டு வந்திருந்தனர். இதி்ல, விஜய்யின் அப்பா, அம்மா மற்றும் நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திரையுலக பிரபலங்களும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவி்த்தனர். இந்த மாநாட்டில் விஜய் முழுமையாக அரசியலில் ஈடுபடபோவதாகவும், சினிமா கரியரை விட்டுவிட்டு மக்களுக்காக பணியாற்ற இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். இதனால், அவர் கடைசியாக நடிக்கும் படம் ஜனநாயகன் தான் என கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் விஜய் சமீபத்தில் ரசிகர்களை சந்த்தித்த வீடியோக்களும் வைரலானது.

பாலா செய்வதில் தவறு இல்லை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும அது இது எது, கலக்ககப்போவது யாரு சேம்பியன்ஸ் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் அடைந்தவர் அமுதவாணன். பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வரும் இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது KPY பாலா செய்து வரும் உதவிகள் விளம்பரத்திற்காக செய்வதாகக் கூறப்படுகிறது. சில நேரங்களில் இவை சர்ச்சையாகவும் மாறியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்த அமுதவாணன், பாலா இப்போதும் மட்டும் அல்ல எப்போதும் என்னுடன் தான் இருக்கிறான். மற்றவர்கள் செய்ய தயங்கும் போது ஒருவன் உதவி செய்வதை கிண்டல் செய்வது சரியாக இருக்காது. எதோ செய்கிறான் என்பதை விட விளம்பரத்திற்காக பன்றான் என்று ஏன் சொல்ல வேண்டும். அவனாவது பண்ணட்டும் இப்போ என்ன பிரச்னை இருக்கிறது. ஒரு அரசியல்வாதி, முதல்வர் அல்லது எம்எல்ஏக்கள் விளம்பரத்திற்காக கூட தனது பாக்கெட்டில் இருந்து ரூ.50.000 எடுத்து கொடுப்பது நல்லது தானே. விளம்பரம் என்று சொல்லி வந்தால் மட்டும் காசாக இருக்காது. எப்படி இருந்தாலும் அது காசுதான் என அமுதவாணன் தெரிவித்தார். மேலும், பாலா படத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறினார்.

விஜய் நல்லது செய்வார்: இதன்பின்னர் பேசிய அமுதவாணனிடம் விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு, விஜய் அரசியல் குறித்த பேசிய அமுதவாணன், விஜய் மாஸாக இருக்கும்போதே அரசியலுக்கு வருகிறார். அவர் வந்தால் மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறது. இதுல இருக்க கஷ்டம் தெரிஞ்சும் மாஸாக இருக்கும்போதே அரசியலுக்கு வராருனா நிச்சயமா மக்களுக்கு நல்லது தான் செய்வார். சூப்பர் ஸ்டார் தளபதி பேசுவதை கேட்க லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். இதையெல்லாம் வேண்டாம் என்று அரசியலை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் ஜெயிக்கிறார் தோல்வியடைகிறார் என்பதை தாண்டி இதில் வந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு இருக்காது. அவரது அரசியல் வருகையை வரவேற்கிறேன் என அமுதவாணன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











