அசீமிடம் கேள்வி கேட்ட அமுதவாணன்.. நியாயமான விஷயம்தான்!

சென்னை : பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இன்றைய தினம் 18வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான டாஸ்க்குகளை போட்டியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய தினம் டால் டாஸ்கிற்கான சண்டைகளில் போட்டியாளர்கள் ஈடுபட்டதை காண முடிந்தது.

வித்தியாசமான டாஸ்க்குகள்

வித்தியாசமான டாஸ்க்குகள்

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து தினந்தோறும் வித்தியாசமான டாஸ்க்குகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்த சீசனில் மிகவும் பரிட்சயமான போட்டியாளர்கள் யாரும் இல்லாத சூழலில் டாஸ்க்குகளை வித்தியாசமாக கொடுத்து வருகின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். நித்தம் ஒரு டாஸ்க்குகள் கொடுக்கப்படும் நிலையில் போட்டியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

வெங்காயம் சாப்பிடும் டாஸ்க்

வெங்காயம் சாப்பிடும் டாஸ்க்

நேற்றைய தினம்கூட வெங்காயம் சாப்பிடும் டாஸ்கை மேற்கொண்டார் மணிகண்டன். இதில் அவர் வென்றாலும் அதை தொடர்ந்து நெஞ்சை பிடித்துக் கொண்டு குட்டிப் போட்ட பூனையாய் மாறி, அங்கும் இங்கும் அவர் நடைபோட்டதை பார்க்க முடிந்தது. இதனிடையே தொடர்ந்து பொம்மை டாஸ்கையும் போட்டியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பொம்மை டாஸ்கில் சர்ச்சை

பொம்மை டாஸ்கில் சர்ச்சை

இந்த டாஸ்கை மேற்கொண்ட அவர்களுக்குள் அதிகமான சண்டைகள், சச்சரவுகள் ஏற்பட்டதையும் பார்க்க முடிந்தது. அசீம், தனலட்சுமியின் நெஞ்சில் கைவைத்து பொம்மை கூடாரத்தில் தள்ளிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த டாஸ்க்

ரசிகர்களை கவர்ந்த டாஸ்க்

இதனிடையே இன்றைய தினமும் டால் டாஸ்கில் போட்டியாளர்கள் தொடர்ந்து பரபரப்புடன் செயல்பட்டனர். மற்ற போட்டியாளர்கள் கைகளில் இருந்த பொம்மைகளை பிடுங்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். சிறுவயது குழந்தைகளை போல தங்களது வயதை மறந்து இந்த டாஸ்கில் அவர்கள் ஈடுபட்டதை காண முடிந்தது.

அமுதவாணன் கேள்வி

அமுதவாணன் கேள்வி

நிகழ்ச்சி இன்றைய தினம் 18வது நாளை எட்டிய நிலையில், அமுதவாணனை வம்பிழுக்கும் வகையில் அசீம் பேசியதை இன்றைய இரண்டாவது ப்ரமோவில் காண முடிந்தது. இதையடுத்து கடுப்பான அமுதவாணன், தனலட்சுமியை வாடி போடி, அவ இவ என்று சொல்வது சரியா என்று கேள்வி எழுப்பினார்.

களைகட்டும் பிக்பாஸ் வீடு

களைகட்டும் பிக்பாஸ் வீடு

கடந்த சில தினங்களாக அடுத்தடுத்த டாஸ்க்குகளால் பிக்பாஸ் வீடு களைகட்டி வருகிறது. போட்டியாளர்களும் அடுத்தடுத்த வாக்குவாதங்களால் தொடர்ந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வருகின்றனர். இதனிடையே தற்போது பொம்மை டாஸ்க் மூலம் அவர்களுக்குள் அதிகமான போட்டிகள் ஏற்பட்டுள்ளதையும் காண முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X