நான் இப்படி செய்வேன்னு நானே நினைக்கவில்லை: ஏமி ஜாக்சன்
சென்னை: காய்கறி, பழங்களை விளைவிக்க லண்டன் புறநகர் பகுதியில் பெரிய நிலம் வாங்க இடம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஏமி ஜாக்சன்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில படங்களில் நடித்து வருகிறார் ஏமி ஜாக்சன். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த வசதியாக மும்பையில் 3 பெட்ரூம் வீடு வாங்கி இந்த ஆண்டு குடியேறினார்.

மேலும் தமிழ் படங்களில் கூடுதல் கவனம் செலுத்த சென்னையிலும் வீடு வாங்கிப் போட்டுள்ளார். இந்நிலையில் ஏமியின் கவனம் திடீர் என்று இயற்கை விவசாயம்(ஆர்கானிங் ஃபார்மிங்) மீது சென்றுள்ளது.
காய்கறி, பழங்களை விளைவிக்க லண்டன் புறநகர் பகுதியில் பெரிய நிலம் வாங்க இடம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஏமி. என் அம்மாவுக்கு ஆர்கானிக் டயட் மீது ஆர்வம் உள்ளது.
அந்த காரணத்தினால் தான் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நான் இப்படி செய்வேன் என்று ஒரு நாளும் நினைத்தது இல்லை. நல்ல உணவு உண்டு நலமாக வாழ விரும்புகிறேன் என்கிறார் ஏமி.


Click it and Unblock the Notifications











