»   »  மேலாடை நழுவ... காதலருடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன்!

மேலாடை நழுவ... காதலருடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை எமி ஜாக்சன் மிகவும் கவர்ச்சியான போஸில் ஒரு இளைஞரின் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மதராசப் பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன் போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின.

இதில் விக்ரமுடன் இணைந்து நடித்த ஐ படத்தின் மூலம் இவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தை துபாயில் கொண்டாடிய எமி ஜாக்சன் இளைஞர் ஒருவரின் மடியில் தான் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தில் மேலாடை நழுவ ஒரு கால் தெரியும்படி மிகவும் ஆபாசமாக உடையணிந்து எமி ஜாக்சன் காணப்படுகிறார்.இந்தப் படத்தை இவரே வெளியிட்டு இருப்பதால் அவர் கண்டிப்பாக எமியின் காதலர் தான் என்று பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

Dubai Memories 🎩

A photo posted by Amy Jackson (@iamamyjackson) on Jan 6, 2016 at 2:20pm PST

ஏற்கனவே இந்தி நடிகர் சூரஜ் பாஞ்சோலியுடன் எமி டேட்டிங் மேற்கொண்டு வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த புகைப்படத்தை எமி ஜாக்சனே வெளியிட்டு இருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

எமி ஜாக்சன் தற்போது தெறி, கெத்து மற்றும் 2.0 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நடித்திருக்கும் கெத்து திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Amy Jackson who sits on the lap of a Young Man in a Very Attractive Pose. Now this Photo Goes on viral in Social Networking Sites.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil