கல்யாணமாகி 3 மாசம்.. கர்ப்பமாகி 5 மாசமா? எமி ஜாக்சனின் பேபி பம்ப் போட்டோஷூட்!
சென்னை: தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த, நடிகை எமி ஜாக்சன் காதலர் எட் வெஸ்ட்விக் திருமணம் செய்து கொண்டு, தற்போது கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏ.எல் விஜய் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான படம் மதராசபட்டினம். இப்படத்தில், ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் எமி ஜாக்சன், அந்த படத்தில் இங்கிலாந்து ராணி போல அம்சமாக இருந்தார். முதல் படமே மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து எமி ஜாக்சனுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. மதராசப்பட்டினம் பட வெற்றியைத் தொடர்ந்து விக்ரமுடன் ஐ, தாண்டவம், கெத்து, 2.0, தங்க மகன், தெறி, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அண்மையில் எமி ஜாக்சன் அருண் விஜய்யுடன் இணைந்து மிஷன் படத்தில் நடித்திருந்தார். தியேட்டரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

காதலரை பிரிந்தார்: நடிகை எமி ஜாக்சன், ஜார்ஜ் என்ற தொழிலதிபருடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் பல ஆண்டுகள் இருந்தார். திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆண் குழந்தைக்கு தாயான எமி, குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தனர். ஆனால், அதற்கு முன்பே எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து காதலர் ஜார்ஜின் போட்டோவை டெலிட் செய்தார். இதையடுத்து, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தார்.
இரண்டாவது காதலர்: காதலரை பிரிந்து தனியாக வசித்து வந்த எமி ஜாக்சன், பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல இடத்தில் சுற்றித்திரிந்த இவர்கள் கடந்த மார்ச் மாதம், லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தடபுடலான விருந்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதில் எமி ஜாக்சன் தனது மகனுடன் மோதிரத்தை மாற்றிக் கொண்டார்.

இரண்டாம் முறை கர்ப்பம்: இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் நடிகர் எட் வெஸ்ட்டை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. இந்நிலையில், எமி ஜாக்சன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள தகவலை கணவர் எட் வெஸ் பகிர்ந்துள்ளார். அதில் பேபி பம்புடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து எமி ஜாக்சன் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு பல இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், சிலர் கணக்குப்போட்டுப்போட்டு கல்யாணமாகியே 3 மாசம் தான் ஆச்சு அதுக்குள்ள ஐந்து மாசம் கர்ப்பமா என கேள்வி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











