இது என்ன கொண்டாட்டம்? நெத்தியில இப்படி, கழுத்துல அப்படி.. தோழியுடன் டிரைப் லுக்கில் எமி ஜாக்சன்!
சென்னை: தனது தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு, நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர், இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன்.
விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் வெள்ளைக்காரப் பெண்ணாக நடித்திருந்தார்.

காதல், கர்ப்பம்
இதை விஜய் இயக்கி இருந்தார். ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்து தமிழில் நடித்தார். விக்ரமின் தாண்டவம், தனுஷின் தங்கமகன், விக்ரமின் ஐ, விஜய்யின் தெறி உட்பட சில படங்களில் நடித்தார்.

தொழிலதிபருடன் காதல்
தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களில் நடித்த அவர், தமிழில் கடைசியாக ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்திருந்தார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்திருந்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார்.

நிச்சயதார்த்தம்
பின்னர் கர்ப்பிணியாக இருந்த எமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் ஜார்ஜ் பெனாய்டோவுக்கும் லண்டனில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த விழாவில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண நிச்சயதார்த்த வீடியோ, பரபரப்பாக அப்போது வைரலாயின.

ஆண்ட்ரியாஸ்
இந்நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார், எமி ஜாக்சன். எமிக்கும் ஆண்ட்ரியாஸுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாவில்.

நடிகை அனா டனகா
இந்நிலையில், எமி ஜாக்சனின் தோழியும் நடிகையுமான அனா டனகாவுக்கு பர்த் டே. அவர் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் எமி. அதில், உனது அழகான ஆன்மா, உலகின் அனைத்து மகிழ்ச்சிக்கும் தகுதியானது. உனது கனவு அனைத்தையும் நனவாக்க இன்னொரு வருடம் வருகிறது. வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

இரண்டு தேவதைகள்
நன்றி தெரிவித்துள்ளார், நடிகை அனா. அந்தப் போட்டோவில் பழங்குடியினர் மாதிரி முகத்திலும் நெஞ்சிலும் படங்களை வரைந்துள்ளனர். லட்சக்கணக்கான லைக்ஸ் பெற்றுள்ள இந்த பதிவுக்கு பலர் நச் கமென்ட்களையும் பதிவு செய்துள்ளனர். பலர் அனாவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். ஒருவர் ஒரே பிரேமுக்கும் இரண்டு தேவதைகள் என்று இந்தப் போட்டோவை வர்ணித்துள்ளார்.
Recommended Video

பழங்குடி லுக்
இன்னொருவர், என்னம்மா இது, இப்படி பண்றீங்களேமா? என்று கலாய்த்துள்ளார். ஓ இது பழங்குடியினர் (டிரைப்) லுக்கா, நல்லாருக்கு என்று சிலர் கூறியுள்ளனர். பலர், எங்க உங்க மகனை காணோம் என்று விசாரித்துள்ளனர். பலர் அவர் அழகை வர்ணித்துள்ளனர். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











