»   »  எமி ஜாக்சனால் மீண்டும் ஷங்கருக்கும் ரஜினிக்கும் பிரச்னை!

எமி ஜாக்சனால் மீண்டும் ஷங்கருக்கும் ரஜினிக்கும் பிரச்னை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

யாரை எங்கே வைக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லாவிட்டால் இப்படித்தான் போல... ரஜினி, ஷங்கர், லைக்கா, அக்‌ஷய்குமார் என்று இணைந்த 2.ஓ வின் பிரம்மாண்ட கூட்டணியில் தங்களுக்கு ஒரு இடம் கிடைத்துவிடாதா என்று இந்திய ஹீரோயின்களே ஏங்கிய போது அந்த அதிர்ஷ்டம் எமி ஜாக்ஸனுக்கு அடித்தது.

ஷங்கரின் புண்ணியத்தால் அடித்த அதிர்ஷ்டத்துக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளவில்லை எமி ஜாக்ஸன். பார்ட்டிகளுக்கு செல்லும்போது ஃபோட்டோக்களை கசிய விடுதல், ஆபாச போஸ் கொடுத்து சர்ச்சைகளில் மாட்டுவது என்று ஷங்கரை கடுப்பேற்றும் செயல்களையே செய்து வந்தார். சில காலம் இவையெல்லாம் விட்டு வைத்திருந்தவர் அடுத்து சிக்கியிருப்பது பீட்டா சர்ச்சை.


Amy Jackson creates new headache to 2.O

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை தடை செய்வதில் ஆர்வம் காட்டியதால் பீட்டா மீது நம்ம ஆட்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.


ஏற்கெனவே ரஜினி மகள் சவுந்தர்யா விலங்கு நல வாரியத்துக்கு நியமிக்கப்பட்ட போதே எதிர்ப்புகள் கிளம்பின. அவர் முறையான விளக்கம் கொடுத்ததால் தப்பித்தார்.


இப்போது எமி ஜாக்ஸன் பீட்டா அமைப்புக்காக ஒரு ஆல்பம் உருவாக்கி அதில் நடித்தும் கொடுத்திருக்கிறார். இன்னும் சில நாட்களில் அது ரிலீஸாகவிருக்கிறது.


இங்கிருக்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அமைப்புகள் 2.ஓ வை எதிர்த்து இப்போதே குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.


எமியம்மா இப்படி பண்றீங்களேம்மா...?

English summary
2.O heroine Amy Jackson is planning to release an Album for controversial PETA which is against for Jallikkattu. Due to this album, the Jallikkattu supporters are gearing up to oppose 2.O movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil