Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கர்ப்பமாக இருப்பது தெரியாமல் ஏமி ஜாக்சன் செய்த காரியத்தை பாருங்க
Recommended Video
லண்டன்: ஏமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதையே 6 வாரங்கள் கழித்து தான் கண்டுபிடித்துள்ளார்.
நடிகை ஏமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஏமி தெரிவித்துள்ளார்.
தாயாவது குறித்து ஏமி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
ரஜினியின் எந்திரனை பார்த்து அவெஞ்சர்ஸ் படத்திற்கு கிளைமாக்ஸ் வைத்தோம்: இயக்குநர்
கஷ்டம்
முதல் 12 வாரங்கள் கஷ்டமாக இருந்தது. ஆனால் நான் கர்ப்பமாக இருப்பதை 6 வாரங்கள் கழித்து தான் கண்டுபிடித்தேன். நான் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் இலங்கை, இந்தியா, நியூயார்க் என்று பயணம் செய்து கொண்டிருந்தேன்.
குழந்தை
நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட பிறகு சற்று ஓய்வெடுக்க முடிவு செய்தேன். இது திட்டமிடப்பட்ட கர்ப்பம் அல்ல. குழந்தை பிறந்த பிறகு அது என்னுடன் சேர்ந்து பயணம் செய்யும் என்பதில் உறுதியாக உள்ளேன்.
அம்மா
எங்களுக்கு அழகான வீடு உள்ளது. அப்பா, அம்மா ஆக நானும், ஜார்ஜும் தயாராகிவிட்டோம். என் குடும்பத்தார் மிகவும் ஆதரவாக உள்ளனர். நான் கொடுத்து வைத்தவள். தாயாகப் போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கெரியர்
குழந்தை பிறந்த பிறகும் நான் நடிப்பில் கவனம் செலுத்துவேன். கெரியர் மிகவும் முக்கியம். ஆனால் குட்டி பிரேக் எடுத்துவிட்டு தான் நடிப்பை தொடர்வேன். நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த கர்ப்ப காலத்தை பிரேக்காக நினைக்கிறேன் என்றார் ஏமி ஜாக்சன்.