இளைஞர்களை ஊக்கப்படுத்தும் எமிஜாக்சன் வீடியோ!
எமிஜாக்சன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

லண்டன்: நடிகை எமி ஜாக்சன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் விராட் கோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச் டிரெண்ட் ஆனது. இப்போது எமி ஜாக்சன் வீடியோ ட்ரெண்ட் ஆகிறது. ஆனால் விராட் மாதிரி இவர் எந்த சேலஞ்சும் விடவில்லை.

பொதுவாக நடிகைகள் என்றாலே ஜிம்முக்கு போவார்கள், உடற்பயிற்சி செய்வார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். அந்த எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக நடிகை எமி ஜாக்சன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தம்பல்ஸ் வைத்து அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. உடலினை உறுதி செய்யவேண்டும் என ஜிம்முக்கு போகும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல ஃபிட்னஸ் ட்ரெயினரான பிராட்லி சைமண்ட்ஸுடன் மீண்டும் பயிற்சியைத் துவங்கி விட்டதாக எமி ஜாக்சன் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் உள்ள தி மே ஃபேர் நட்சத்திர விடுதியின் உடற்பயிற்சி கூடத்தில் அவர் உடற்பயிற்சி செய்கிறார்.
மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். பார்பி பொம்மை போல் இருக்கும் அவருடைய அழகையும், அவரின் கொஞ்சல் தமிழையும் கண்டு, துரையம்மா என செல்லமாக அழைக்க ஆரம்பித்தார்கள்.
ஐ, தாண்டவம், தங்கமகன் என தமிழ்ப்படங்களில் நடித்த எமி ஜாக்சன் அடுத்ததாக 2.0 வில் கலக்க காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











