டிரெஸ் போட்டிருக்காரா, இல்லையான்னே தெரியலையே.. காட்டுக்குள்ள இப்படி நின்னு என்ன எமி, இதெல்லாம்?

By

லண்டன்: டிரெஸ் போட்டிருக்காரா, இல்லையா என்பதை போல நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள போட்டோஸ் வரைலாகி வருகிறது.

திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் தொடர்ந்து இன்ஸ்டாவில் மிரட்டி வருகிறார் எமி ஜாக்சன்.

அவர் பதிவிடும் ஒவ்வொரு போட்டோவும் லட்சணக்கான லைக்ஸ்களை அள்ளி குவிக்கிறது.

வெள்ளைக்காரப் பெண்

வெள்ளைக்காரப் பெண்

மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் வெள்ளைக்காரப் பெண்ணாகவே அவர் நடித்திருந்தார். ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கதை என்பதால் அந்த கேரக்டருக்கு அவர் அப்படியே பொருந்தினார். படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார்.

தனுஷின் தங்கமகன்

தனுஷின் தங்கமகன்

நாசர் உள்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். பாடல்கள் ஹிட்டாயின. இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. விக்ரமின் தாண்டவம், தனுஷின் தங்கமகன், விக்ரமின் ஐ, விஜய்யின் தெறி உட்பட சில படங்களில் நடித்தார்.

தொழிலதிபருடன் காதல்

தொழிலதிபருடன் காதல்

தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களில் நடித்த அவர், தமிழில் கடைசியாக ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்திருந்தார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்திருந்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

பின்னர் கர்ப்பிணியாக இருந்த எமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் ஜார்ஜ் பெனாய்டோவுக்கும் லண்டனில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த விழாவில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண நிச்சயதார்த்த வீடியோ, பரபரப்பாக அப்போது வைரலாயின.

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஏகப்பட்ட ரசிகர்கள்

இந்நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர் வைத்தனர். குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார், எமி ஜாக்சன். எமிக்கும் ஆண்ட்ரியாஸுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாவில்.

கடினமான யோகா

கடினமான யோகா

இந்நிலையில் அவர் இப்போது காட்டுக்குள் கடினமான யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். டைட்டாக உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள போட்டோஸுக்கு ரசிகர்கள் ஜாலியான கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒல்லி பெல்லி

ஒல்லி பெல்லி

ஒருவர், ஆஹா, அருமையா ஒல்லி பெல்லி ஆயிட்டீங்களே? என்று ஆச்சரியப்பட்டுள்ளார். இன்னொருவர், எப்ப தமிழ் சினிமாவுக்கு வரப்போறீங்க? என்று கேட்டுள்ளார். அம்மாவான பிறகும் உடலை வெறித்தனமா, கரெக்டா மெயின்டெயின் பண்றீங்களே, வாழ்த்துக்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Nakkhul Hair Massage to his Wife Sruthi | Amy Jackson Quarantine
பாசக்கார பொடியன்

பாசக்கார பொடியன்

டிரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையான்னா தெரியலை.. இவ்வளவு டைட்டாவா டிரெஸ் போடறது என்று சில நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர். இப்ப உங்களை பார்த்து, ஒரு குழந்தைக்கு அம்மான்னு சொன்னா நம்பவே மாட்டாங்க. அவ்வளவு ஸ்லிம்.. என்று சில நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். உங்களை விட உங்க மகனை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க அந்த பாசக்கார பொடியனை? என்று ரசிகை ஒருவர் கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X