திருமணத்திற்கு திட்டமிட வருங்கால கணவருடன் வெனிஸுக்கு பறந்த கர்ப்பிணி ஏமி

By Siva

Recommended Video

ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அக்கறையுடன் சொன்ன குறிப்புகள்- வீடியோ

வெனிஸ்: கர்ப்பிணியான ஏமி ஜாக்சன் தனது திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

நடிகை ஏமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த பெரும் பணக்காரரான தொழில் அதிபர் ஜார்ஜை திருமணம் செய்ய உள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் ஏமிக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Amy Jackson is in Venice with George

ஏமி ஜாக்சனுக்கும், ஜார்ஜுக்கும் கடந்த மே மாதம் 5ம் தேதி முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஏமியும், ஜார்ஜும் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஏமி, ஜார்ஜுடன் சேர்ந்து வெனிஸுக்கு சென்றுள்ளார். தங்களின் திருமணம் குறித்து திட்டமிட அங்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏமி பெரிதாக இருக்கும் தனது வயிறு தெரியும்படி புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது தவிர்த்து வருங்கால கணவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஏமிக்கு கிரேக்க தீவில் திருமணம் செய்து கொள்ள ஆசையாக உள்ளது என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஏமி இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் திருமணம் செய்யப் போகிறாராம்.

திருமணம் பற்றி ஏமி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

எங்களின் திருமணம் உலகின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அனைவருக்கும் வசதியான இடத்தை தேர்வு செய்ய விரும்புகிறோம். இந்தியா, அமெரிக்காவில் இருந்து எல்லாம் ஆட்கள் வருவார்கள். லிவர்பூலில் கூட எங்களின் திருமணம் நடக்கலாம் என்றார்.

ஏமி ஜாக்சன் கர்ப்பமான பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். ஆனால் ஜார்ஜுடன் சேர்ந்து அடிக்கடி பயணம் செய்து கொண்டிருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிப்பை தொடர அவர் திட்டமிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று ஜார்ஜ் ஏமியிடம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். மேலும் குழந்தையுடன் பல இடங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார் ஏமி. இது திட்டமிடப்படாத கர்ப்பம் தான் என்றாலும் பெற்றோராக தயாராகிவிட்டதாக ஏமி முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X