'2.O' நாயகி 'துரையம்மா' இப்போ இந்தி கத்துக்குறாங்களாம்..!
மும்பை : 'மதராசபட்டினம்' படத்தில் நடிப்பதற்காக லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வந்து தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார் எமி ஜாக்ஸன். எமி, தற்போது ரஜினியுடன் 2.O படத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்கவேண்டும் என்பதற்காக இந்தி மொழியைக் கற்கத் துவங்கி உள்ளார். இதற்காக தனியாக ஒரு இந்தி மாஸ்டரை பணி அமர்த்தியிருக்கிறார் எமி.

இதுகுறித்தி எமி ஜாக்ஸன் கூறுகையில், இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் இந்தி கற்கத் தொடங்கியிருக்கிறேன். புதிய மொழி என்பதால் கொஞ்சம் சிரமமாகத் தான் உள்ளது. இருந்தாலும் அதை முறைப்படி கற்றுக் கொள்வேன்.' எனக் கூறியிருக்கிறார்.
'தற்போது '2.O' ப்ரொமோஷன் வேலைகளில் இருப்பதாலும், சில வெளிநாட்டுப் படங்களில் நடிப்பதால் அங்கும், இங்குமாய் அலைந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் ஸ்கைப் மூலம் பயின்று வருகிறேன்' என்று கூறியுள்ளார் எமி ஜாக்ஸன்.


Click it and Unblock the Notifications











